Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

உதயநிதிக்கு ‘ஓஹோ’ வரவேற்பு!

மூ
ன்று நாள் பயணமாக ஜூன் 30-ம் தேதி திருச்சி வந்தார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அன்பில் பொய்யாமொழியின் சகோதரி மகன் கார்த்திகேயன்-வந்தனா திருமண விழாவில் மனைவி துர்கா,  மகன் உதயநிதி ஸ்டாலின் சகிதமாகக் கலந்துகொண்டார். ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட கட்அவுட், பேனர்களைக் காட்டிலும் உதயநிதிக்கு வைக்கப்பட்டிருந்தவைதான் அதிகம். ‘தலைவா’, ‘நாளைய தளபதியே’, ‘செயல் தலைவரின் தளபதியே’ என உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களும், கட்அவுட்களும் திருச்சியைக் கலக்கின.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

திருமணத்தில், மணமகனின் அருகிலேயே நீண்ட நேரம் நின்றிருந்தார் ஸ்டாலினின் மனைவி துர்கா. மண்டபத்தைவிட்டு ஸ்டாலின் கிளம்பிய பிறகும், அங்கேயே இருந்த துர்கா ஸ்டாலினுடன் ஏராளமானோர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு, உதயநிதி ஸ்டாலின் தன் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக 2018-ம் ஆண்டின் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும் திருச்சி சங்கம் ஹோட்டலில் வைத்து விருதுகள் வழங்கினார். ஏராளமான கட்அவுட்கள், பேனர்கள், திருமணத்தில் வரவேற்புரை என உதயநிதிக்கு கூடுதலாகவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ‘‘அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி பகுதியில் உதயநிதி களமிறங்கப்போவதற்கான அறிகுறிகள் இவை’’ என்று கட்சி வட்டாரத்தில் இப்போதே பேச்சு கிளம்பிவிட்டது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘ஸ்டாலின் வருவது தெரியாது!’’

தி
.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமணம், தஞ்சாவூரில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திருமணத்தை ஸ்டாலின் நடத்தி வைத்துக்கொண்டிருந்தபோதே, மண்டபத்திற்குள் திவாகரன் நுழைந்தார். திவாகரனின் ஆதரவாளர் ஒருவர் வந்து, ‘‘வாங்கண்ணே மேடைக்கு’’ என அழைத்தார். ‘‘ஸ்டாலின் திருமணத்தை முடித்துவிட்டு இறங்கி வரட்டும். அதன்பிறகு நான் மேலே செல்கிறேன்’’ என மேடைக்குக் கீழேயே அவர் அமர்ந்தார். அருகில் டி.ஆர்.பி.ராஜா, பந்தல் சிவா இருவரும் அமர்ந்து நீண்ட நேரம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

மேடையைவிட்டு இறங்கிய ஸ்டாலின், திவாகரனிடம் வந்து சிரித்தபடி நலம் விசாரித்துவிட்டுக் கிளம்பினார். ஒரு நிமிடமே ஸ்டாலினும் திவாகரனும் சந்தித்தனர் என்றாலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ‘‘மணமக்கள் வீட்டார் இருவரும் எனக்கு நெருங்கிய உறவினர்கள். அதனால், திருமணத்துக்கு வந்தேன். ஸ்டாலின் இங்கு வருவது எனக்குத் தெரியாது. எனக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பிதழில்கூட ஸ்டாலின் படம் இடம் பெறவில்லை’’ என்று திவாகரன் சொன்னதுதான் தமாஷ்.

70 ஜோடிகளா... 90 ஜோடிகளா?

.தி.மு.க-வில் இணை ஒருங்கிணைப்பாளராக ஆகிவிட்டாலும், மாவட்ட அளவில் பதவி இருந்தால்தான் கட்சிக்காரர்களிடம் மரியாதை என நினைக்கிறார் கே.பி.முனுசாமி. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீருக்கும் நிரூபிக்க, அவர் ஏற்பாடு செய்தது ஒரு திருமண விழா. ‘ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவில் 70 ஜோடிகளுக்குத் திருமணம்’ என்று தடபுடலாக அழைப்பிதழ் அச்சடித்து விட்டார்.

அதன்பின், ஜெயலலிதாவுக்கு ஜோதிடம் பார்த்தவர்களில் ஒருவரான திருவொற்றியூர் ஜோதிடரிடம் கே.பி.முனுசாமி ஆலோசனை கேட்டிருக்கிறார். ‘நவகிரகங்களைச் சாந்தப்படுத்த 9, 90, 99 என்ற எண்ணிக்கையில் கன்னிப்பெண்களின் திருமண ஆசையை நிறைவேற்றி வைத்தால், அதிகாரமிக்க பதவி கைகூடும்’ என்று அவர் கூறியுள்ளார். ஜோதிடரைப் பார்க்கும் முன்பே, 70 ஜோடிகளுக்குத் திருமணம் என அழைப்பிதழ் அடித்த கே.பி.முனுசாமி, அதன்பின் 90 ஜோடிகளுக்குத் திருமணம் என அறிவித்தார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

இதற்கிடையே, ‘கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து இந்தத் திருமண விழாவை முனுசாமி நடத்தவில்லை. இதில் முதல்வர் கலந்துகொள்ளக் கூடாது’ என்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு ஒன்றியச் செயலாளர்கள் முதல்வர் பழனிசாமியிடம் முறையிட்டனர். ஆனால், ‘திருமணம் என்பது மங்களகரமான நிகழ்வு. அதைப் புறக்கணிப்பது நல்லதல்ல’ என்று அவர்களை முதல்வர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். விழாவுக்கு வந்த முதல்வர், மேடை ஏறும்வரை ‘எத்தனை ஜோடிகளுக்குத் திருமணம்’ என்று மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

திருமணத்தை நடத்தி வைத்தபிறகுத் துணை முதல்வர் பன்னீர், ‘இன்னமும் வாங்காத பசுமாட்டின் பாலைப் பங்கு பிரிப்பதற்குச் சண்டை போட்டுக்கொண்ட தம்பதி’ பற்றிய குட்டிக்கதையைச் சொல்லி ‘யாருக்கோ’ குட்டு வைத்தார். ‘‘அது கே.பி.முனுசாமிக்குத்தான்’’ என்கிறார்கள் கிருஷ்ணகிரி அ.தி.மு.க-வினர்.

‘‘அரசியல்வாதிகளுடன் உட்கார மாட்டேன்!’’

ன்கொடுமை தடுப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு ஜூன் 29-ம் தேதி திருப்பதியில் நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். விழாவுக்குச் சிறப்பு அழைப்பாளர்களாகப் புரட்சிகரப் பாடகர் கத்தார், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். பேரணியில் வந்த கே.ஜி.பாலகிருஷ்ணனை திருமாவளவன் வரவேற்றார். மாநாட்டு அரங்கில், பார்வையாளர்கள் வரிசையில் கே.ஜி.பாலகிருஷ்ணன் உட்கார்ந்தார். ‘மேடைக்கு கே.ஜி.பாலகிருஷ்ணன் வரவேண்டும்’ என மேடைக்கு வந்த திருமாவளவன் விருப்பம் தெரிவித்தார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

ஆனால், கே.ஜி.பாலகிருஷ்ணன் மேடைக்குப் போகவில்லை. ‘‘அரசியல்வாதிகள் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர் என்ற தகவலை எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. அரசியல்வாதிகளுடன் நான் மேடையில் உட்கார மாட்டேன்’’ என்று சொல்லிவிட்டு அரங்கத்திலிருந்து வெளியேறினார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அதன்பின் மாநாட்டில் பேசினர்.

- சி.ய.ஆனந்தகுமார், கே.குணசீலன், எம்.வடிவேல், இரா.தேவேந்திரன்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ம.அரவிந்த்