Published:Updated:

ராமதாசுக்கு போலீஸ் பாதுகாப்பு திடீர் விலக்கல்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு திடீரென விலக்கி கொண்டுள்ளது. இதனால் ராமதாசுக்கு அவரது கட்சியினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா தைலாபுரம் தோட்டத்தி்ல் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

ஒரு போலீஸ் ஏட்டு, உள்ளூர் போலீசார் 3 பேர், ஆயுதப்படை போலீசார் 3 பேர் என மொத்தம் 7 பேர் அடங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், ராமதாசுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு நேற்று முன்தினம் திடீரென விலக்கி உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஆயுதப்படை போலீசார் 3 பேர் விழுப்புரத்துக்கும், போலீஸ் ஏட்டு மற்றும் 3 போலீசார் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

##~~##
மாமல்லபுரத்தில் நேற்று தினம் நடந்த சித்திரை பெருவிழா மாநாட்டில் போலீசாரை தரக்குறைவாக பேசிய ராமதாஸ், போலீஸ் பாதுகாப்பு குறித்து சில கருத்துகளையும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு விலக்கி கொண்டுள்ளது.