Published:Updated:

ஜெ. ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம்தான்: ஸ்டாலின்

ஜெ. ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம்தான்: ஸ்டாலின்
ஜெ. ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம்தான்: ஸ்டாலின்

திருச்சி: ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம் நடப்பது சகஜமான ஒன்றுதான் என்று கூறிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மூன்று முறை ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதும் சாதிக் கலவரங்கள் நடந்தே வந்திருக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.
 

ஜெ. ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம்தான்: ஸ்டாலின்

திருச்சியில் இன்று தி.மு.க இளைஞரணி சார்பில் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது இதில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அட்டைகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், தமிழ்நாட்டில் சமீப காலமாக சாதிக் கலவரம், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதே என்று கேள்வி கேட்கப்பட்டது.
 

ஜெ. ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம்தான்: ஸ்டாலின்

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம் நடப்பது சகஜமான ஒன்றுதான். அவர் மூன்று முறை முதல்வராக இருக்கும்போதும் சாதிக் கலவரங்கள் நடந்தே வந்திருக்கின்றன என்றார்.

15 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழகத்தில் மின்தட்டுப்பாட்டை போக்க சில திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் அறிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளி்த்த ஸ்டாலின், தமிழக மக்களை பொறுத்த வரை அது 111 என்றார்.
 

ஜெ. ஆட்சிக்கு வந்தாலே சாதிக் கலவரம்தான்: ஸ்டாலின்

சென்னை மேயர் சைதை துரைசாமி உங்கள் மீது வழக்கு போடுவதாக கூறியிருக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், அவர் போட இருக்கும் வழக்கை சந்தி்க்க தயாராக இருக்கிறேன். சென்னையில் அண்மையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஊழலை கண்டித்தும் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சியில் 4 ஆயிரம் கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளதாகவும், ஆயிரம் கோடிக்கு சாலைப்பணிகள் நடந்துள்ளதாகவும் மேயர் அறிவித்துள்ளார். இந்த திட்டங்களுக்கு புள்ளி விவரத்தோடு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என நான் கேட்டேன். அதற்கு இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடாமலும், பதிலும் சொல்லாத மேயர் துரைசாமி என் மீது வழக்குப் போடுவதாக கூறியுள்ளார். இதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

##~~##
அம்மா உணவகம் பற்றிய கேள்விக்கு, அம்மா உணவகத்தில் சும்மா உணவு போட்டாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்காக மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள், சுகாதார வளாகங்கள், கழிப்பறைகள் ஆகியவற்றில் அமைப்பதையும், மாநகராட்சியின் ஓட்டுமொத்த அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்துவதைத்தான் எதிர்க்கிறேன் என்றார் மு.க.ஸ்டாலின்.

சாதிக் பாட்சா


படங்கள்:
ப்ரீத்தி கார்த்திக்