Published:Updated:

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை!- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை!- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்
விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட யூனிட்டி சிலை!- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட வைரல் புகைப்படம்

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கு ரூ. 3,000 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான சிலை குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டது. இதைத் திறந்து வைத்த பிரதமர் மோடி அக்டோபர் 31-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். தற்போது, குஜராத்தின் முக்கிய சுற்றுலா மையமாக இந்தப் பகுதி மாறி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கை லேப் நிறுவனம் தன் செயற்கைக் கோள் மூலம் விண்வெளியில் இருந்து சர்தார் வல்லபபாய் படேல் சிலை புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இஸ்ரோ நிறுவனம் ஒரே பி.எஸ்.எல்.வி ராக்கெட் வழியாக விண்வெளிக்கு 104 செயற்கைக் கோள்களை ஏவியது. அதில், 88 செயற்கைக் கோள்கள் பூமியின் பல்வேறு பகுதிகளைப் புகைப்படம் எடுக்கும் செயற்கைக் கோள்கள். ஆகும். அவற்றில் பெரும்பாலான செயற்கைக் கோள்கள் ஸ்கை லேப் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை 597 அடி உயரம் கொண்டது. சீனாவின் வசந்தகால புத்தர் சிலையைவிட 177 அடி உயரம் அதிகம். நியூயார்க் நகரில் உள்ள சுதத்திரதேவி சிலையைவிட இரு மடங்கு உயரம் கொண்டது .