Published:Updated:

`அணு உலைக்கு எதிரான போராட்டம் புதிய வீரியத்துடன் மீண்டும் நடைபெறும்!’ - சுப.உதயகுமார்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் புதிய வீரியத்துடன் மீண்டும் நடைபெறும் என பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதயகுமார் தெரிவித்தார்.

சபரிமலைக்குப் பெண்களை அனுமதிக்கக் கோரியும் அங்கு செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரியும் தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் நாகர்கோவில் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதய குமார் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் மத்திய அரசு நிதி மூலம் 220 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுவரும் பாலம் ஆட்டம் கண்டுள்ள நிலையில் இருக்கிறது. எனவே, பாலத்தின் உறுதித் தன்மை குறித்து மக்களிடம் முறையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இந்தப் பணியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுவதால், இது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6 வது அணு உலைக்கான பூமி பூஜை ரகசியமாக நடைபெற்றுள்ளது. மக்களுக்குப் பயன்படும் நல்ல திட்டம் என்றால் அதை ஏன் ரகசியமாகச் செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் புதிய வீரியத்துடன் மீண்டும் நடைபெறும். கவனிக்க வேண்டியவர்களைக் கணிசமாகக் கவனித்து விட்டு குமரி மாவட்டத்தில் மண், கல் போன்ற கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்தக் கடத்தலுக்கு தமிழக அரசுதான் முழு காரணம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு