Published:Updated:

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 7

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 7
ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 7

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 7

தொடரின் மற்ற பாகங்களைப் படிக்க...

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது ‘பை ப்ராடக்ட்’ என்கிற முறையில் உடன் கிடைக்க கூடிய சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம், தங்கம், பிளாட்டினம், வெள்ளி, பல்லேடியம் என விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்து கொள்ள லாபம் சம்பாதிக்கும் இந்த நிறுவனம், இது குறித்து முழுமையான தக்வல்களை அரசுக்கு தெர்விக்காமல் வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் எழுந்தது.

2010 ஆகஸ்ட் மாதத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு செய்த மத்திய கலால் துறை அதிகாரிகள், இந்த நிறுவனம் 750 கோடி ரூபாய் வரி ஏயப்பு செய்திருப்பதை கண்டுபிடித்தனர் இதற்காக நிறுவனத்தின் துணைத் தலைவரான வரதராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடக்கோரி மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரை பிணையில் விடுவித்த நீதிமன்றம், நெல்லையில் உள்ள மத்திய கலால் துறையில் 200 கோடி ரூபாய் பிணைத்தொகையாக கட்ட வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.

கடத்தப்பட்ட விலை உயர்ந்த உலோகங்கள்

ஸ்டெர்லை நிர்வாகம் வரி ஏய்ப்பு செய்த விவகாரம் தூத்துக்குடி மக்களால் பரபரப்பாக பேசப்பட்டது. அது அடங்குவதற்கு முன்பாக அடுத்த சில நாட்களிலேயே விலை உயர்ந்த பொருட்களை அனுமதி பெறாமல் கடத்தி சென்றதாக அதே கலாத்துறையினரிடம் சிக்கிக் கொண்டது, ஆலை நிர்வாகம். இந்த கடத்தல் விவகாரம் தூத்துக்குடி நகரத்தில் அபோது ஹாட் டாபிக் ஆக பேசப்பட்டது.

அதாவது, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகத்துக்கு அருகில் வாகன சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது ஆலையில் இருந்து வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக 36 பெட்டிகள் இருந்து உள்ளது. ஆலையின் கழிவை கட்டிகளாக்கி அதனை சென்னை விமான நிலையம் வழியாக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருப்பதாக அதனை எடுத்து சென்றவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த கழிவுகளை வெளிநாட்டுக்கு அனுப்பி அதில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியை பிரித்து எடுக்க இருப்பதாகவும், அதற்கான ஆவணங்களையும் காட்டி உள்ளனர்.
 

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 7

அந்த கழிவுகளில் இருந்து 1080 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி கிடைக்கும் என்றும் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கழிவுகள் அடங்கிய அந்த கட்டிகளை சோதனைக் கூடத்துக்கு அனுப்பினர். அங்கு ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வந்திருக்கிறது, அதனை பார்த்து கலால் துறை அதிகாரிகள் மலைத்து விட்டார்களாம். காரணம், அந்த கழிவுகளில் தங்கம், வெள்ளி மட்டும் அல்லாமல் விலை உயர்ந்த உலோகங்களான பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் ஆகியவையும் இருந்து உள்ளது.


ஆனால் அது பற்றி தெரிவிக்காமல் அரசுக்கு வரி கட்டாமலே பல வருடங்களாக இது போன்ற முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்து இருக்கிறது. இதனால் 60 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த கழிவுகளை பறிமுதல் செய்த கலால் துறையினர் இதற்காக ஆலை நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.

2500 பேருக்கு புற்றுநோய்

மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும், சுற்று சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவது பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் அறிக்கை வெளியானபோது, தொழில் நகரமான தூத்துக்குடி நாட்டிலேயே மிக மோசமான நகரம் என குறிப்பிடபப்ட்டு இருந்தது. மக்கள் வசிப்பதற்கு ஆபத்தான நகரம் என்கிற தகவலும் உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மாசு மிகுந்த தொழிற்சாலைகளால் தூத்துக்குடி மாநகர மக்கள் புற்றுநோய், சுவாசக்கோளாறு போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி வருவது தெரிய வந்து இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக நிரூபணமாகியுள்ளது.

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 7

இதுதொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவின் அமைப்பாளரான நயினார் குலசேகரன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து பல அரிய தகவல்களை பெற்று இருக்கிறார்.

அதில், புற்றுநோயாளிகள் தொடர்பான கேள்விக்கான பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 2 ஆயிரத்து 552 பேர் புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்று இருக்கிறார்கள். வருடந்தோறும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் தகவலும் தெரிய வந்து உள்ளது. புற்றுநோயாளிகள் பெருகுவதற்கு தூத்துக்குடியை சுற்றிலும் பெருகிவரும் மாசு நிறைந்த தொழிற்சாலைகளே காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய,மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தெரிவித்த ஆலோசனைகள், பரிந்துரைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. அத்துடன் 2004 ல் உச்ச நீதிமன்றம் சார்பில் அமைக்கபப்ட்ட கண்காணிப்புக் குழு பல்வேறு பரிந்துரைகளை செய்து இருந்தது. அவையும் செயல்படுத்தப்படவே இல்லை. அரசும் ஆலை நிர்வாகத்தை கண்காணிக்கவில்லை. இதுவே நோயாளிகளின் நகரமாக தூத்துக்குடிமாறுவதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

இந்த நிலையில, உயர் நீதிமன்றம் ஆலையை மூட உத்தரவிட்டது குறித்த தகவல்கள்...

அடுத்த கட்டுரைக்கு