Published:Updated:

ப.சிதம்பரத்தை 'பா.சிதம்பரம்' ஆக்கிய சிவகங்கை காங்கிரஸ்

ப.சிதம்பரத்தை 'பா.சிதம்பரம்' ஆக்கிய சிவகங்கை காங்கிரஸ்
ப.சிதம்பரத்தை 'பா.சிதம்பரம்' ஆக்கிய சிவகங்கை காங்கிரஸ்

சிவகங்கை: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 'பா.சிதம்பரம்' என தவறாக பிரசுரம் செய்து போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர் சிவகங்கை காங்கிரஸார்.

ப.சிதம்பரத்தை 'பா.சிதம்பரம்' ஆக்கிய சிவகங்கை காங்கிரஸ்

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். வங்கிக் கட்டடங்கள் திறப்பு விழா, கட்சி அலுவலகங்களை பார்வையிடல் என இரண்டு நாளும் நிமிடக் கணக்கில் பிஸியாக இருந்தார் சித்து.

அவரது கட்சிக்காரர்கள் அதைக்காட்டிலும் பிஸியாக இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனால் தான் அவரை வரவேற்பதற்காக ரெடியான போஸ்டரில் கரெக்க்ஷன் கூட பார்க்காமல் விட்டிருக்கிறார்கள்.

தனது பெயரை 'ப.சிதம்பரம்' என்பதற்கு பதிலாக 'பா.சிதம்பரம்' என்று போட்டிருக்கும் இந்த போஸ்டர்களை மரியாதைக்குரிய மத்திய நிதியமைச்சர் பார்த்திருப்பாரா?

-சாய் தர்மராஜ்