Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

விகடன் விமர்சனக்குழு

கம்பேரிஸன் கோவாலு!

பிரீமியம் ஸ்டோரி

‘‘சார்... அந்த தூத்துக்குடி கலவரம்?’’ - ‘ஹே... ஹே... டேஞ்சரஸ் பீப்புள்!’, ‘‘சார், அந்த எட்டுவழிச் சாலை..?’’ - ‘அது வந்து... குட் ஃபார் பிசினஸ்!’, ‘‘அந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்?’’ - ‘ஹே... இட் சேவ்ஸ் டைம் அண்ட் மணிய்யா!’

இப்படித்தான் பதில்கள் வருகின்றன பாட்ஷா பாயிடமிருந்து! விவரம் தெரிந்தவர்களிடம் விசாரித்ததில் எல்லா அரசுத் திட்டங்கள் பற்றியும் பாசிட்டிவாகப் பேசும் விரதம் மேற்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அடுத்து அவர் என்ன பேசுவார் என்பதையும் அவர்களே சொல்கிறார்கள்.

கம்பேரிஸன் கோவாலு!

‘சார், அந்த ஆதார் கார்டை எல்லாத்தோடவும் இணைக்கணும்னு சொல்றாங்களே?’

‘‘ஆக்சுவலி இட்ஸ் குட். ஒரு நடிகரா பார்த்தீங்கனா எந்நேரமும் மேக்கப்புடனே இருக்கவேண்டியதா இருக்கு. தட்ஸ் நாட் குட்! ஆதார்ல இருக்கிற போட்டோவை மக்கள் பார்த்தாதான் நாங்க இப்படினு தெரியவரும். விச் இஸ் குட் ஃபார் இந்தியா! ஸோ, ஐ வெல்கம் திஸ் ப்ளான்!’’

‘சார், எங்க பார்த்தாலும் இன்கம்டாக்ஸ் ரெய்டா நடக்குது... மிரட்டிப் பணியவைக்கிறாங்களோனு தோணுது?’

‘‘ஹே, டோன்ட் பீ சில்லி! இன்கம்டாக்ஸ் கட்டாம ஏமாத்துறவங்களை தண்டிக்க மோடிஜி ஆடுற கேம் இது. விச் இஸ் குட் ஃபார் எகானமிக் டெவலப்மென்ட். இதை நான் இவ்ளோ ஆதரிக்கக் காரணமே, அடுத்து வாடகை பாக்கி கேட்டு கேஸ் போடுறவங்க வீட்லயும் ரெய்டு நடக்கும்னுதான்.’’

‘பெட்ரோல் விலை கூடிக்கிட்டே இருக்கே சார்?’

‘‘நைஸ் கொஸ்டீன். பெட்ரோல் விலை சீப்பா இருக்குறதாலதான் எல்லாரும் வண்டி வாங்கி ஓட்டுறாங்க. அது காஸ்ட்லி ஆயிட்டா கார் வச்சிருக்கிறவங்க மட்டுமே போறமாதிரி ஆயிடும். இன்னும் காஸ்ட்லி ஆகணும். அப்போ ட்ராஃபிக் கம்மியாயிடும், விச் இஸ் குட் ஃபார் சுற்றுச்சூழல்.’’

‘சார், பதஞ்சலியை பிரதமரே ப்ரொமோட் பண்ணலாமா?’

‘‘ஏன் பண்ணக்கூடாது. ஆன்மிக அரசியல்தான் நாட்டுக்கு நல்லதுனு சொல்றேன். அப்போ ஆன்மிக பிசினஸ் பொருளாதாரத்துக்கு நல்லதாதானே இருக்கும்!’’

‘தாமரை கண்டிப்பா மலரும்னு சொல்றாங்களே?’

‘‘எல்லாப் பூக்களும் வளர்றப்போ, தாமரை வளர்றதுல என்ன தப்பு? தாமரைப்பூவை சாப்பிட்டா மீடியாக்களால வர்ற தலைவலில இருந்து தப்பிக்கலாம். கோர்ட், கேஸ் பத்திப் பயம் இல்லாம நல்லா தூங்கலாம். ஆஸ்துமா, வயித்துப்போக்குனு நிறைய விஷயங்களைக் குணமாக்கும்.’’

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு