Published:Updated:

‘ஜிஎஸ்டி வரி வரலாற்று சிறப்புமிக்கது’ - ஆஸ்திரேலியாவில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

‘ஜிஎஸ்டி வரி வரலாற்று சிறப்புமிக்கது’ - ஆஸ்திரேலியாவில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்துக்கு ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக இந்தியக்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றார்.தாய்லாந்திலுள்ள புராதானமான இந்து கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். அத்துடன் ஜனாதிபதி அங்கே தான் சென்றதன் நினைவாக ஒரு மரக்கன்றையும் நட்டார். பிறகு அங்கு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட குடியரசுத்தலைவர் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். அங்கு சிட்னி நகரில் இந்திய வம்சாவழியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ஆஸ்திரேலியா, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து தன்னுடைய பேச்சைத் தொடங்கினார். அதற்குப் பிறகு இந்தியாவின் பொருளாதார நிலைக் குறித்துப் பேசினார்.

வரலாற்று சிறப்புமிக்க சேவை மற்றும் சரக்கு வரி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதை அங்குள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அத்துடன், உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது. கடந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் 8.2 சதவீதம் உயர்ந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.