Published:Updated:

106 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.53 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா

106 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.53 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா
106 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.53 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா
106 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.53 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா

சென்னை: அ.தி.மு.க தொழிற்சங்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 50,000 ரூபாய் வீதம் , மொத்தம் 53 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 50,000 ரூபாய் வீதம், மொத்தம் 53 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.

##~~##
அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிதி உதவி பெற உள்ள நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நிதியுதவி 8.5.2013 புதன்கிழமை அன்று காலை 9 மணி அளவில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் வழங்கப்படும்" என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.