Published:Updated:

“மோடிதான் நமக்கு அம்மா!” - தமிழிசை வாய்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“மோடிதான் நமக்கு அம்மா!” - தமிழிசை வாய்ஸ்
“மோடிதான் நமக்கு அம்மா!” - தமிழிசை வாய்ஸ்

“மோடிதான் நமக்கு அம்மா!” - தமிழிசை வாய்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

துரை ஒத்தக்கடையில் தமிழக பி.ஜே.பி-யின் மாநில மகளிர் மாநாடு ஜூலை 22-ம் தேதி ‘தமிழ்மகள் தாமரை மாநாடு’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பி.ஜே.பி-யின் அகில இந்திய மகளிரணித் தலைவி விஜயா ராஹத்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

“மோடிதான் நமக்கு அம்மா!” - தமிழிசை வாய்ஸ்

மாலை மூன்று மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூன்று மணி அளவில், சுமார் 200 பேர்தான் அங்கு இருந்தனர். வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பெண்கள் பலரும் மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில், திருப்பரங்குன்றம், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் என்று தரிசனங்கள் முடித்துவிட்டு தாமதமாக மாநாட்டுக்கு வந்துசேர்ந்தனர்.

பறை இசை நிகழ்ச்சி, கிராமியப் பாடல்கள், முளைப்பாரி ஊர்வலம் என மாநாடு களைகட்டியது. மாநாட்டில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘தொழில் முனைவோர்களாகப் பெண்களை மாற்ற, பல்வேறு திட்டங்கள் பி.ஜே.பி அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் மூலம் 70 சதவிகித கடனுதவி பெண்களுக்கே தரப்பட்டிருக்கிறது. பாஸ்போர்ட் பெறும் பெண்களுக்கு, கணவன் பெயரைக் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு ஆண் துணைத் தேவையில்லை. அடுப்பூதும் பெண்களின் கண்ணீரைத் துடைக்க, இலவச எரிவாயுத் திட்டத்தை மோடி கொண்டுவந்தார். 2020-ல் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பெண்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் அசௌகரியத்தைப் போக்குவதற்காக, நான்கு ஆண்டுகளில் ஏழு கோடி பேருக்கு, தனிநபர் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று தமிழகத் தாய்மார்களின் ஒரே கோரிக்கை, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதுதான்.    பி.ஜே.பி ஆட்சி மலர்ந்தால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும்’’ என்றார்.

“மோடிதான் நமக்கு அம்மா!” - தமிழிசை வாய்ஸ்

தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியபோது, “மதுரை பெருமாள் கோயில் தெருவில் உள்ள சிறிய பள்ளியில் பயின்ற நான், இன்று பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவராக உயர்ந்துள்ளேன். ஒரு பெண் நினைத்தால், தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றிக்காட்ட இயலும். மோடிதான் நமக்கு அம்மா. பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இது என்று கருதுவதற்கு. சானிட்டரி நாப்கினுக்கு வரி விலக்கு என்ற ஒன்று போதாதா. இலவச கேஸ் அடுப்பு கொடுத்து நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்களிலிருந்து பெண்களைப் பாதுகாத்தவர் மோடி. இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது என்னால் சவால் விட்டுச் சொல்ல முடியும், தாமரை தமிழகத்தில் மலரும்’’ எனப் பேசினார்.

மேடையில் ஆண்கள் யாருக்கும் நாற்காலிகள் போடப்படவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் மேடைக்கு வந்து பேசிமுடித்துவிட்டு, உடனே கிளம்பினார். அப்போது அவருடன் பலரும் அங்கிருந்து வெளியேறினர். தமிழிசை செளந்தர்ராஜன் பேசியபோது, மிகக் குறைவானவர் களே அங்கு இருந்தனர். கடைசியாக விஜயா ராஹத்கர் பேசியபோது, விரல்விட்டு எண்ணும் அளவுக்கே தலைகள் தென்பட்டன. ஒரு லட்சம் பெண்களைத் திரட்டுவதென்று திட்டமிட்டிருந்தனர். ஆனால், சுமார் 5,000 பேர் கலந்துகொண்டதாக போலீஸ் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

- அருண் சின்னதுரை
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு