Published:Updated:

‘அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளிப்பார்கள் ’ - முதல்வர் அறிவிப்பு

‘அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளிப்பார்கள் ’ - முதல்வர் அறிவிப்பு
‘அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக அளிப்பார்கள் ’ - முதல்வர் அறிவிப்பு

கஜா புயல் வீசிய முதல்நாள் அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குறித்து பல தரப்பிலிருந்து பாராட்டினார்கள். ஆனால், அதற்கு அடுத்தடுத்த நாட்கள் மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம், ஆகியவற்றின் தரம் என அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அமைச்சர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். முதமைச்சரின் ஹெலிகாப்டர் நலம் விசாரிப்பு மேலும் மக்களை கொதிப்படையச் செய்தது. இத்தகைய சூழலில் தமிழக அரசு கஜா புயலின் பாதிப்பிலிருந்து மக்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் துரிதப்படுத்தும் கட்டாயம் உருவாகி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த உடனே அந்த அறிக்கையை எடுத்துக் கொண்டு நேற்று காலை டெல்லிக்குச் சென்று மோடியை சந்தித்தார். புயல் நிவாரணத் தொகையாக 15,000 கோடி வழங்க வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார். அதற்கு பிறகு டெல்லியில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறதென கூறி இருக்கிறார். முத்தாய்ப்பாக அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்குவார்கள் என தெரிவித்திருக்கிறார். மக்களின் அதிருப்தியை முதல்வரின் நடவடிக்கை எந்த அளவுக்கு இன்னும் சரிநிலைப்படுத்தும் என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.