Published:Updated:

பலவீனமான மத்திய அரசை நாடு இதுவரை கண்டதில்லை: மோடி சாடல்

பலவீனமான மத்திய அரசை நாடு இதுவரை கண்டதில்லை: மோடி சாடல்
பலவீனமான மத்திய அரசை நாடு இதுவரை கண்டதில்லை: மோடி சாடல்
பலவீனமான மத்திய அரசை நாடு இதுவரை கண்டதில்லை: மோடி சாடல்

பெங்களூர்: "தற்போதைய மத்திய அரசை போன்ற பலவீனமான அரசை நாடு இதுவரை கண்டது இல்லை" என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பெங்களூரில் பிரசாரம் செய்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தற்போது இருப்பதை போன்ற பலவீனமான மத்திய அரசையோ அல்லது பலவீனமான தலைவரையோ நாடு இதுவரை கண்டது இல்லை என்று குற்றம்சாட்டினார்.

டெல்லி போன்ற சிறிய மாநிலத்தை கூட பாதுகாக்க முடியாத காங்கிரஸ், கர்நாடகா போன்ற பெரிய மாநிலத்தை எப்படி காப்பாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பிய மோடி, காங்கிரஸ் தனது சாதனைகளை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் சாதனைகளுடன் ஒப்பிடத் தயாரா? என்று சவால் விடுத்தார்.

காங்கிரஸ் கட்சி, ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது என்றும் அப்படி இருக்கையில், ஊழலில் உலக சாதனை படைத்து விட்டதாக பா.ஜ.க.வை காங்கிரஸ் குறைகூறுவது வினோதமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

##~~##
பா.ஜ.க.வில் உள்கட்சி பூசல் இருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட மோடி, ஆனால் அந்த பூசல், அரசு நிர்வாகத்தை பாதிக்காதவாறு பா.ஜ.க. பார்த்து கொண்டது என்றார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நரேந்திர மோடி கூறினார்.