Published:Updated:

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

கருணாநிதி 50

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

கருணாநிதி 50

Published:Updated:
“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

ருணாநிதி தி.மு.க தலைவராகப் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். பொது வாழ்வில் அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தமிழகம் அறிந்தவை. தனிப்பட்ட வாழ்வில் அவரின் ரசனைகள் பலவும், குடும்பம் மட்டுமே அறிந்தவை. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மிக அபூர்வமாகவே பத்திரிகையாளர்களிடம் பேசுவார். அப்படி ஓர் அபூர்வமாக, கருணாநிதி பற்றி ஜூ.வி 04.06.2000 இதழில் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் சில இங்கே...   

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• அவர் கட்டும் கரைவைத்த வேட்டி, சட்டைத் துணி, கர்ச்சீப் எல்லாம் நான்தான் போய் வாங்கிட்டு வருவேன். பாரீஸ் கார்னர்ல இருக்கும் `சங்கு மார்க்’ கடையில்தான் வழக்கமா வாங்குவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ராத்திரி நேரங்கள்ல லுங்கிதான் கட்டிப்பார். பாம்பே டையிங்லதான் லுங்கிகள் வாங்குவோம். பனியன் மாதிரி உள்ளாடைகளைப் பாண்டி பஜார்ல ஏதாவதொரு நல்ல கடையில நானே அப்பப்ப வாங்கிடுவேன். குறிப்பா இன்ன கடைனு கிடையாது.

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• ஒரு நாளைக்கு ரெண்டு தரம் துணி மாத்துவார். எலெக்‌ஷன் மாதிரி அதிகமா வெயில்ல சுத்துற நேரங்கள்ல, ஒருநாளைக்கு மூணு சட்டை மாத்துவார்.

• அவருக்கு 20- 25 வருஷமா ஒருத்தரே சட்டை தைச்சுத் தர்றார். கோடம் பாக்கத்தில்தான் இருக்கார். பேரு மூர்த்தி.

• சட்டையில் இருந்து கர்ச்சீப் வரைக்கும் எந்தத் துணியா இருந்தாலும் சரி, புதுசு போடவே மாட்டார். வந்ததும் நல்லா ஊறவெச்சுத் துவைச்சு, அயர்ன் பண்ணித் தந்தாதான் ஆச்சு.

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• Raymond Well வாட்ச் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அழகிரி, ஸ்டாலின், செல்வி, பேத்தி, பேரன்கள் அவருக்குப் பிறந்த நாள் மாதிரி விசேஷம் வந்தா வாட்ச்தான் பிரசன்ட் பண்ணுவாங்க. கோல்டு, சில்வர் ஸ்ட்ராப் எதுவும் பிடிக்காது. வெயிட் இல்லாத லெதர் ஸ்ட்ராப்தான் கட்டிப்பார். வட்ட டயல்னா ரொம்பப் பிடிக்கும்.

• அறிஞர் அண்ணா போட்ட மோதிரம்தான் இன்னும் அவர் விரல்ல இருக்கு. இதுதவிர, யாரோ ஒரு சமயம் பரிசு கொடுத்த ஒரேயொரு பவள மோதிரம் மட்டும் போட்டிருக்கார். நிறையப் பேர் அவருக்கு மோதிரம் பரிசா தர்றதுண்டு. ஆனா, எதையும் நிரந்தரமா போட்டுக்க மாட்டார்.

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• கறுப்புக் கண்ணாடி போட ஆரம்பிச்சது 1954-ம் வருஷம். ஒரு கார் ஆக்ஸிடென்ட்ல அவர் கண் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் பண்ணினாங்க. அதுகப்புறம்தான் பவரும் சேர்ந்த கறுப்புக் கண்ணாடி போட ஆரம்பிச்சார். ராத்திரி புத்தகம் படிப்பது, எழுதுறது என எல்லாத்துக்கும் அந்தப் பவர் கண்ணாடியைத்தான் பயன்படுத்துவார். காலையில் மாட்டினா, ராத்திரி படுக்கும்போதுதான் கழட்டுவார்.

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• அவர்கிட்டே ரெண்டு கண்ணாடி இருக்கு. ஒரு கண்ணாடி எப்பவும் அவர் பி.ஏ-கிட்டே இருக்கும். டாக்டர் அகர்வால்கிட்டேதான் கண் டெஸ்ட் பண்ணிப்பார். அவர்கிட்டேதான் கண்ணாடியும் வாங்கிப்பார்.

• சால்வை போட ஆரம்பிச்சது 90-லதான். ஒருதரம், அவருக்குக் கன்னத்தில் வீக்கம் மாதிரி ஏதோ தொந்தரவு வந்தது. அந்த இடத்தில், உல்லன் நூல் இதமா படறது நல்லது என்று டாக்டர் சொன்னார். அதிலிருந்து தான் கட்சிக்கரை போட்ட அங்கவஸ்திரத்துல இருந்து உல்லன் சால்வைக்கு மாறினார்.

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• குறிப்பா, மஞ்சள் கலர் சால்வை போட ஆரம்பிச்சது சமீபமாகத் தான். அந்தக் கலரைத் தேர்ந்தெடுத்ததுக்கும், டாக்டரின் ஆலோசனை தான் காரணம். மஞ்சள் சால்வை மொத்தம் 15 இருக்கு. ஆர்டர் கொடுத்து அதை டெல்லியில வாங்குறோம். காலையில ஒண்ணு, சாயங்காலம் ஒண்ணு மாத்திப்பார்.

• முன்பு அவருக்குப் பிடிச்ச சோப் `யார்ட்லி’. அந்த பிராண்டு பவுடரைத்தான் முகத்துக்கும் போட்டுப்பார். இதுக்காகவே யாராவது வெளிநாடு போனா சொல்லிவெச்சு வாங்கிட்டு வரச் சொல்வேன். யாரோ சொன்னாங்கனு மைசூரு சாண்டல் சோப்புக்கு மாறிட்டார். இப்ப பவுடரும் அதே பிராண்டு.

• முன்பெல்லாம் வாரத்துல ரெண்டு நாள் தலைக்கு எண்ணெய் தேச்சுக் குளிப்பார். கண் ஆபரேஷனுக்கு அப்புறம் எண்ணெய் தேச்சு குளிக்கவே கூடாதுனு டாக்டர் சொல்லிட்டதால் அந்த வழக்கத்தை விட்டாச்சு.

• சென்ட் உபயோகப்படுத்திப் பழக்கமே இல்லை. யாராவது பரிசாகக் கொடுத்தால்கூட வீட்டுல வேற யாருக்காவது தந்துடுவார். யூடிகொலோன் நறுமணம் சுறுசுறுப்பு தரும் என்பதால், கர்ச்சீப்பில் ஒத்தியெடுத்து அப்பப்போ முகத்தைத் துடைச்சுப்பார்.

• அவர்கிட்ட நாலைந்து ஜோடி செருப்பு இருக்கு. வெள்ளைநிற தோல்செருப்புதான் அவருக்குப் பிடிக்கும். அண்ணா சாலை உம்மிடியார் ஷாப்பிங் சென்டர்லதான் ஆர்டர் கொடுத்து வாங்குவேன். வாக்கிங் போறப்ப மட்டும் கட் ஷூ போடுவார்.

• எத்தனை கஷ்டத்தையும் தாங்குகிற உடம்பு... அவருக்கு அதிகமா வர்ற பிரச்னை வயிற்றுக் கோளாறுதான்.

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• சாதாரணமா அவர் என்னைக் கூப்பிடறது ‘தயாளு’, ரொம்ப சந்தோஷமா கூப்பிடணும்னா ‘தயா’.

• சாப்பாடு விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பார். தேங்காய், எண்ணெய் மாதிரி விஷயங்கள் சுத்தமா ஆகாது. காலையில் பொங்கல் செஞ்சா, விரலால் அதைத் தொட்டுப் பார்ப்பார். விரல்ல எண்ணெய் ஒட்டலேன்னாத்தான் சாப்பிடுவார். இல்லேன்னா, ஓரமா ஒதுக்கிடுவார்.

• அவருக்குப் பிடிக்காத விஷயம், ஹோட்டல்ல சாப்பிடறது. பசங்க ஹோட்டலுக்குப் போனாலே திட்டுவார். அதுக்குன்னே பயந்துட்டு அவர் ஊருக்குப் போயிருக்க நாளாப் பார்த்து ஹோட்டலுக்குப் போவாங்க.

• வாரத்தில் ரெண்டு நாள் ஆப்பம் செய்யச் சொல்வார். ஆப்பத்துக்கு தேங்காய்ப் பாலுக்குப் பதில் சாதாரண ஆவின் பால்தான் கேட்பார். இட்லிக்குக்கூட தேங்காய்ச் சட்னி இல்லை. கொத்துமல்லி, தக்காளி, வெங்காயச் சட்னியும் சாம்பாரும்தான்.

• முன்னே எல்லாம் மதியம் 12 மணிபோல சிக்கன் சூப் குடிப்பார். இப்போது 10 -15 வருஷமா வெஜிடபிள் சூப்தான். சூப்புக்கு முன்னால 11 மணிபோல ஒரு கப் காபி. வெயில் நாள்ல காபிக்குப் பதில் இளநீர்.

• மதியம் தினமும் ஏதாவது ஒரு கீரை இருந்தாகணும். கத்திரிக்காய், முள்ளங்கி ரொம்பப் பிடிக்கும். அதையும் குழம்புல போட்டாத்தான் சாப்பிடுவார். தப்பித் தவறி கத்தரிக்காய் எண்ணெய் வதக்கல் போல ஏதாவது செஞ்சிட்டா கோபமாயிடுவார்.

• மாலையில் முன்னேயெல்லாம் தோசை விரும்பிச் சாப்பிடுவார். இப்போ பிரட்தான். சூடான டீயில் பிரட் தொட்டுச் சாப்பிடுவார்.

• பசி கொஞ்சம் அதிகமாக இருந்தாலோ, டயர்டா இருந்தாலோ... இரண்டு பேரீச்சை பழம் கூடுதலாகச் சாப்பிடுவார்.

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• இரவு நேரத்தில் இரண்டே இரண்டு சப்பாத்தியும் குருமாவும். கூடவே திராட்சை, பப்பாளி, சப்போட்டா மாதிரி பழங்களும்.

• ஒருநாளில் கிட்டத்தட்ட 10 தினசரி பேப்பர்களையாவது படிப்பார். தவிர, முக்கியப் பத்திரிகைகள். மனசுல தைக்கிற செய்தியை அவரே பார்த்துக் குறித்து, தன் செயலாளர் சண்முகநாதனுக்கு அனுப்புகிறார் - ஆக்‌ஷனுக்கு.

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• வெயிலோ பனியோ வெதுவெதுப்பான சுடுநீரில் குளிப்பதுதான் அவருக்குப் பிடிக்கும்.

• காபி முதற்கொண்டு எந்த விஷயமுமே அவருக்கு வீட்டிலிருந்து போவதுதான். அவர் வெளியூர் கிளம்பும்போது மூன்று நாள் அல்லது அதற்குமேலே டூர் இருந்தால், சாப்பாடு விஷயத்துக்காக அவருடன் ரெண்டு பேர் கொண்ட ஒரு டீம் போகுது. கேஸ் ஸ்டவ், தோசை சட்டியில் ஆரம்பித்து பூரிக்கட்டை வரை ஒரு செட் பேக் செய்து எப்பவும் ரெடியாக இருக்கும்.

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• அறிவாலயம் கட்டியதிலிருந்துதான் அவருக்கு வாக்கிங் போகும் பழக்கமே வந்தது. காலை 5.30 மணிக்குக் கிளம்பி தினம் 20 நிமிஷம் வாக்கிங். தேசிகாச்சாரிடம் ஒரு வாரம் போல யோகா கற்றிருக்கிறார். வாக்கிங் முடிஞ்சதும் அதுவும் உண்டு.

• ஒருநாள் டூர் என்றால், நன்கறிந்தவர்கள் வீட்டில்தான் சாப்பிடுவார். திருச்சி போனால் நேரு வீடு; விழுப்புரம் என்றால் பொன்முடி; திருவாரூர் என்றால் ஆர்.பி.சுப்பிரமணியம் என்று இதற்கென ஒரு பட்டியலே இருக்கு, அவரிடம்.

• இஞ்சி, ஏலக்காய் பொடித்துப்போட்ட டீ அவருக்கு மிக விருப்பம். சாலட் சாப்பிடப் பிடிக்கும். குறிப்பாக, கேரட்டைப் பொடியாக நறுக்கி எலுமிச்சைச் சாறும் உப்பும் கலந்த சாலட்.

• வீட்டுக்கு வரும் விசிட்டர்களைக் காலையில் மட்டும்தான் பார்க்கிறார். அதுவும்கூட முக்கியமான வேலை இருக்கும் நாள்களில் கிடையாது. பிறந்த நாள், திருமண நாள் என்று சொல்லாமல் கொள்ளாமல் யாராவது வந்து நேரத்தை அபகரித்துக்கொள்ளும்போது, டென்ஷனாகி விடுவார். ஆனா, காட்டிக்க மாட்டார்.

• எப்பவும் பயணம் செய்ய அவருக்குப் பிடித்த வாகனம் அம்பாஸிடர் கார்தான்.

• குழந்தைகளுடன் பேசுவதென்றால் கொள்ளை ஆசை. விளம்பரத்தில் வரும் குழந்தைகளைக்கூடக் கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பார்.

• இரவு 9 மணிக்கு மேல்தான் அவர் குடும்பத்தினருக்காக ஒதுக்கும் நேரம். அந்த நேரத்தில் அவருடன் அரட்டையடிப்பதற்காகவே பேரன் பேத்திகள் எல்லாம் காத்துக்கொண்டிருப்பார்கள்.

• கொள்ளுப் பேத்தியும் (செல்வியின் மகள் வயிற்றுப் பேத்தி), கொள்ளுப் பேரனும் (அழகிரியின் மகள் வயிற்றுப் பேரன்) அவரைக் கூப்பிடுவது `பெரிய தாத்தா’ என்று.

• இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு இணையா சினிமாவிலிருந்து கிரிக்கெட் வரை பேசுறதுக்காகவே நேரம் கிடைக்கறப்பல்லாம் விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சுக்குவார். கிரிக்கெட் ரொம்பப் பிடிச்ச விஷயம். பார்க்க நேரமில்லை என்றாலும் ஸ்டாலின் மகன் உதயநிதி, பேத்தி எழில் போன்றவர்களிடம் அப்பப்ப ஸ்கோர் கேட்டுத் தெரிஞ்சுக்குவார்.

• டி.வி-யில் பழைய படங்கள் பார்ப்பது பிடிக்கும். குறிப்பாக, சிவாஜியின் பழைய படங்களான `பாசமலர்’, `பாகப்பிரிவினை’, `பாலும் பழமும்’ மாதிரி... இந்தக் கேசட்களைச் சொந்தமா வாங்கி வெச்சிருக்கார்.

• இரவு 10 மணிக்கு மேலேதான் எழுதுவது, படிப்பது எல்லாம். இரவு தூங்க 12 மணிகூட ஆகி விடும். ஆனால், எப்போது தூங்கினாலும் காலை 5.30 மணிக்கு எழுந்திடுவார்.

• பெண்கள் ரொம்ப ஆடம்பரமாக நகை போட்டுப் பட்டுப்புடவை கட்டினா, அவருக்கு எப்பவுமே பிடிக்காது. சிம்பிளா இருக்கிறதுதான் பிடிக்கும். ஒருதரம் செல்வி ஏதோ கல்யாணத்துக்காகக் கிளம்பி, பளிச்னு ஒரு நெக்லஸ் போட்டுட்டு என்னையும் கூட்டிட்டுப் போக வந்தது. செல்வியைப் பார்த்ததுமே, `என்ன நகை இது... இவ்வளவு பெரிசா’னு முகத்தைச் சுழிச்சார். அப்பவே போயி செல்வி அந்த நகையைக் கழட்டிப் போட்டுருச்சு.

• அவரிடம் ஒரு செல்போன் இருக்கு. அது, மைசூரு பாக்கு போல் மிகப் பொடிசாக இருக்கும்.

• பார்வையிலேயே உண்மையை வரவழைத்துவிடுவார். அதுவும் மிஞ்சினால் கரகர குரலில் ஒவ்வொரு வார்த்தையிலும் கொக்கி போட்டுக் கேள்வி கேட்பார். அதற்கப்புறம், எதையும் மறைக்கவே முடியாது.

• அவருக்கு வெண்மையான அல்லது வெளிறிய நிறம் கொண்ட கலர்கள்தான் பிடிக்கும். அந்தக் கலர்களில் நான் சேலை கட்டுவதையே விரும்புவார்.

• கோபாலபுரம் ஏரியா விலேயே குடியிருக்கும் டாக்டர் கோபால் என்பவர் தான் தினசரி வந்து சுகர், ரத்த அழுத்தம் போன்ற வற்றை செக்-அப் செய்கிறார். 20 வருடங்களாக அவர்தான் டாக்டர்.

• அழகிரி, ஸ்டாலின் போன்றவர்கள் பள்ளிக்கூடம் போகிற வயதிலிருந்தபோது விளையாட்டுப் போக்காக எதையாவது செய்துவிட்டு வந்தால், ஒரேயொரு பார்வை பார்ப்பார். பையன்கள் எதையும் மறைக்காமல் சொல்லிவிடுவார்கள். இன்றும்கூட அவர் பார்வைக்கும் அதே துளைக்கும் சக்தி கொஞ்சம்கூட கூர் மழுங்காம இருக்கு.

“மழையும் குழந்தைகளும் அவருக்குப் பிடிக்கும்!” - தயாளு அம்மாள்

• இவருக்கு நாய்கள் மேல் பிரியம் அதிகம்னு தெரிஞ்சுதான் வி.பி.சிங், ஒரு நாய்ப் படத்தை வரைஞ்சு இவருக்கு பிரசன்ட் பண்ணினாரு. அந்தப் படம் அவர் ரூம்லதான் மாட்டியிருக்கு.

• ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் முன்பு வாசலில் இருக்கும் தன் அம்மா (அஞ்சுகத்தம்மாள்) படத்துக்கு முன் நின்று ஒரு நொடி தியானம் செய்துவிட்டுத்தான் கிளம்புவார்.

• என்னையும், மருமகள்களையும், மகள் செல்வியையும் `வாம்மா... போம்மா...’ என்றுதான் கூப்பிடுவார். `தலைவரிடம் தான் இந்த மரியாதையை நான் கற்றுக்கொண்டேன்’ என்று நிறைய பேர் சொல்வதுண்டு.

• மழை அவருக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம். குறிப்பாக, அதிகக் கனமில்லாமல் தூறலாக விழும்போது சலிப்பே இல்லாமல் ரசிப்பார். அந்த நேரத்தில் அவர் எழுதிய கவிதைகள் நிறைய.

• இப்ப நினைச்சாலும் அவர் நெகிழ்ந்துபோகிற சம்பவம் ஒன்று. பல வருஷங்களுக்கு முன் நடந்தது. அழகிரி, ஸ்டாலின், செல்வி எனப் பிள்ளைகள் எல்லோருக்கும் பள்ளி செல்லும் வயது. ஒருதரம் வெளியூர் போகுமுன் இரவு அவர் பிள்ளைகளைக் கூப்பிட்டுக் கொஞ்ச... அவர்கள், ``அப்பா... நீங்க அடிக்கடி ஊருக்குப் போங்க’’ என்றார்கள். அவர் குழம்பிப் போய்ப் பார்க்க... ``ஊருக்குப் போறப்பதானே நீங்க எங்களையெல்லாம் கொஞ்சி முத்தம் தந்துவிட்டுப் போறீங்க’’ என்று குழந்தைகள் சொல்லவும்... அவர் ஒரு நொடி கலங்கிப்போய்விட்டார்.