Published:Updated:

அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?

அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?
பிரீமியம் ஸ்டோரி
அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?

அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?

அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?

அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?

Published:Updated:
அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?
பிரீமியம் ஸ்டோரி
அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?

‘ஜெயலலிதாவுக்கு கோவையில்தான் முதல் சிலை வைக்கப்பட்டது’ என்பது வரலாறு; அதன்பின் சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜெ. சிலை, யாரைப் போல இருக்கிறது என்பது தீர்க்கப்படாத தகராறு. கோவையில் ஜெ. சிலை, எந்தவித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டுள்ளது என்பது லேட்டஸ்ட் பகீர்.

2017 டிசம்பர் 3 அதிகாலை... கோவை  வ.உ.சி மைதானத்துக்கு  அருகில் இருந்த அண்ணா சிலைக்கு அருகே திடீரென எம்.ஜி.ஆர் சிலையும் ஜெயலலிதா சிலையும் முளைத்திருந்தது. ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அண்ணா சிலையை செப்பனிடுகிறோம்’ என்ற போர்வையில் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் சேர்த்து சிலை வைத்தனர் அ.தி.மு.க-வினர்.

எந்தத் தகவலும் இல்லாமல் திடீரென சிலைகள் வைக்கப்பட்டதால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. ‘யாரிடம் அனுமதி வாங்கி சிலைகளை வைத்தீர்கள்?’ என்று எதிர்க்கட்சிகள் கேட்டன. கோவை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் என அதிகாரிகளை மீடியாக்கள் தொடர்புகொண்டன. யாரும் வாய் திறக்கவில்லை. ‘சிலையைத் திறக்க முதல்வர் வந்துதானே ஆகவேண்டும்’ என்று காத்திருந்த மீடியாக்களுக்குக் கடும் அதிர்ச்சி. கடைசிவரை முதல்வர் அந்த சிலைகளைத் திறக்க வரவே இல்லை. நூற்றாண்டு விழாத் திடலில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை திறந்துவைக்க வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியிடம், ‘‘விழா முடிந்ததும் கலைக்கப்படப்போகிற புகைப்படக் கண்காட்சியையெல்லாம் திறக்க வர்றீங்க... காலத்துக்கும் இருக்கப்போகிற சிலைகளைத் திறக்க யாரும் வரலையே?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, பதிலே சொல்லாமல் நழுவிவிட்டார்.

அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?

யாருமே சிலைகளைத் திறக்காத மர்மம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்தச் சிலைகள் தொடர்பான தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் பெற்றிருக்கும் கோவை வழக்கறிஞர் லோகநாதன், ‘‘ஜெயலலிதாவுக்கு இவர்கள் சட்டத்தைமீறிச் சிலை வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்’’ என்று சொல்லி அதிரவைத்தார். அவரிடம் பேசினோம். ‘‘ஏற்கெனவே இருந்த அண்ணா சிலையுடன், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளைச் சேர்த்து அமைப்பதற்கு அனுமதிச் சான்று கோரப்பட்டுள்ளதா? இந்தச் சிலைகளை நிறுவுவதற்குத் தமிழ்நாடு அரசு ஏதேனும் அரசாணை பிறப்பித்துள்ளதா?’ என ஆர்.டி.ஐ மூலம் கோவை மாநகராட்சி கமிஷனர், கோவை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் கேட்டிருந்தேன்.

எம்.எல்.ஏ-வும், கோவை அ.தி.மு.க மாநகர் மாவட்டச் செயலாளருமானஅருண்குமார், இந்தச் சிலைகளை நிறுவுவதற்கு கோவை கலெக்டரிடம் மனு கொடுத்ததாகவும், அந்த மனுவின் அடிப்படையில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்ததாகவும் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து தகவல் கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, ‘இந்தச் சிலைகளை முதல்வர் திறந்து வைத்தார் என்று அண்டப்புளுகு புளுகியிருக்கிறார்கள். சிலை நிறுவ அரசாணை ஏதும் இந்த அலுவலகத்தில் இல்லை என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். மொத்தத்தில் இவர்களிடம் அந்தச் சிலையை நிறுவுவதற்காகப் போட்ட அரசாணை எதுவும் இல்லை என்பது தெரியவருகிறது. மாநகராட்சியிலும் இதுகுறித்து எந்தத் தீர்மானமும் போடப்படவில்லை. 

20.11.1998 அன்று தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் ஒரு நிலை ஆணை கொண்டுவரப்பட்டது. தென்மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் வெடித்து தமிழகம் முழுக்க உள்ள சிலைகளுக்கு ஆபத்து வந்த சூழலில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான நிலை ஆணை அது. அதில், ‘ஏற்கெனவே நிறுவப்பட்ட சிலைகள் மாற்றியமைக்கப்பட, சம்பந்தப் பட்ட தனிநபர், அமைப்பு போன்றவை அரசிடம் ஆணை பெற்ற பின்பே செயலில் இறங்க வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிதான் கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தினார். சிலை அமைத்ததும் அவர் ஏற்பாடே. அப்படியானால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே அவரது துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலை ஆணையை மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

அனுமதி பெறாமல் சிலை! - ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறதா அ.தி.மு.க?

எத்தனை சிலைகளை வேண்டுமா னாலும் வைத்துக்கொள்ளட்டும். அதை ஏன் சட்டப்படி செய்ய மறுக்கிறார்கள்? வேலுமணி நினைத்திருந்தால் ஒரே நாளில் அரசாணை வெளியிட்டிருக்க முடியும். ஜெயலலிதாவுக்காக அதை ஏன் அவர் செய்யவில்லை? அரசாணை இருந்தால், முதல்வர் திறந்து வைத்தார் என்று சொன்னால், அதற்கான கல்வெட்டு இருக்க வேண்டுமே? அப்படி எதுவும் இல்லை. ‘1996-ம் ஆண்டு கே.ஏ.செங்கோட்டையனால் திறக்கப்பட்டது’ என்ற பழைய கல்வெட்டுதான் இருக்கிறது. கை பம்பு திறந்தால்கூட கல்வெட்டு வைக்கிறவர்கள், வெள்ள நிவாரணப் பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுத்தவர்கள், ஏன் ஜெ. சிலைக்குக் கல்வெட்டு வைக்கவில்லை? ஜெயலலிதாவுக்கு இது அவமானம் இல்லையா? வாராவாரம் கோவைக்கு வரும் எடப்பாடி, அந்தச் சிலைக்கு ஒருமுறைகூட மாலை அணிவித்ததில்லை’’ என்றார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘இதுபற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது’’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார். சிங்காநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், ‘‘விதியை மீறி வைக்கப்பட்ட சிலை என்றைக்காவது ஓர் நாள் அகற்றப்படும். அதை அவர்களே செய்துவிடுவது நல்லது’’ என்றார்.

இவ்வளவு கோளாறுகளுடன் எதற்காக இந்தச் சிலைகள்?

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்