Published:Updated:

பிரதமர் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

பிரதமர் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
பிரதமர் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
பிரதமர் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: பிரதமர் பதவி விலக வலியுறுத்தி பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் மேற்கொண்ட கடும் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று காலை கூடியதும் பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் 2ஜி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை கிளப்பி கடும் அமளியில் ஈடுபட்டன.குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என பா.ஜனதா அமளியில் ஈடுபட்டதால், அவையில் கூச்சல் குழப்பம் காணப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் மீரா குமார்.

12 மணிக்கு அவை கூடியபோது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் எழுப்பினார். பா.ஜனதா உறுப்பினர்களோ நிலக்கரி சுரங்க ஊழல் பிரச்னையை எழுப்பி, பிரதமர் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை


இதேப்போன்று மாநிலங்களவையிலும் இதே பிரச்னை காரணமாக ஏற்பட்ட அமளியால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.12 மணிக்கு அவை கூடியபோதும் அதே நிலை காணப்பட்டதால், மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அனைத்துக் கட்சி கூட்டம்

இந்நிலையில் அவையை சுமூகமாக நடத்துவதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை சபாநாயகர் மீரா குமார் கூட்டியுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜுடன் கமல்நாத் சந்திப்பு


இதனிடையே தொடர் அமளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, அவையை சுமூகமாக நடத்திட ஒத்துழைப்பு அளிக்கக்கோரி,  மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா ஸ்வராஜை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் சந்தித்துப் பேச உள்ளார்.