Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

Published:Updated:
கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

‘சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லுங்க... இப்ப நான் என்ன செய்ய? இப்ப நான் என்ன செய்ய?’ என ‘தம்பி’ பட மாதவன் மோடில் இருக்கிறார் மோடி. இந்த வருஷ சுதந்திர தின உரையில என்ன பேசணும்னு சொல்லுங்க என மக்களிடம் கருத்து கேட்டிருக்கிறார். அதைப் பொறுத்து அவரின் உரை அமையுமாம். சரி, நாமளும் கொஞ்சம் ஐடியாக்கள் தருவோமே!

கம்பேரிஸன் கோவாலு!

• எப்போதெல்லாம் இக்கட்டான நிலைமை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ‘டீக்கடைக்காரன் நான், ஏழைத்தாயின் மகன் நான்’ என நெஞ்சைப் பிழியும் விக்ரமன் படம் ஓட்டிக் காண்பிக்கிறார். அந்த முழுக் கதையையும் என்றாவது ஒருநாள் கேட்டுவிடவேண்டும். அது இந்த சுதந்திர தின உரையாகக்கூட இருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பயணக்கதைகளுக்கு பொதுவாகவே இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. எனவே, தன் அனுபவங்களிலிருந்து ‘இப்படித்தான் ஜோகனஸ்பெர்க்கிற்கு ஒரு ஜோலியாக சென்றிருந்தபோது...’, ‘பெர்லினுக்கு பணிநிமித்தமாக சென்றபோது’ என எடுத்துவிட்டால் கூட்டம் ஆர்ப்பரிக்கும். முடிந்தால் புத்தகமாகக்கூட போடலாம்.

 

• நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கினாலும் தமிழ்நாட்டுக்கு எட்டுவழி பசுமைச்சாலை, அசாமுக்கு குடிமக்கள் வரைவுப் பட்டியல் என பாரபட்சம் பார்க்காமல் எல்லா மாநிலங்களிலும் புகுந்து விளையாடுகிறார். இப்படி வச்சு செய்யும் துணிச்சலும் தைரியமும் இந்தியாவிலேயே தனக்கு மட்டும்தான் இருக்கிறது என்கிற வீரபிரதாபக் கதையை அவரின் உரையில் சொல்லலாம்.

• நண்பர் அமித் ஷா லேட்டஸ்ட்டாக சி.பி.ஐ இயக்குநர் விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். அவரின் மகன்மீது ஏற்கெனவே ஊழல் புகார்கள் சொல்லப்பட்டன. ஆனாலும், இவை பற்றியெல்லாம் பேசாமல், நட்புக்கு தான் தரும் மரியாதை பற்றி மோடி உரையாற்றலாம். ஆகஸ்ட் முதல் வீக் எண்ட்தான் ஃப்ரெண்ட்ஷிப் டே என்பதால் சரியாக மேட்ச் ஆகும்.

• இவை எதுவுமே செட்டாகாவிட்டால் இருக்கவே இருக்கிறது எவர்க்ரீன் டாபிக். ‘60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் விளைவாகத்தான் அமெரிக்காவில் லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டார்கள்’ என வழக்கம்போல வீர முழக்கமிட்டால் சுபம் போட்டுவிட்டு ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடச் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism