Published:Updated:

புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்!

புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்!
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்!

புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்!

புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்!

புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்!

Published:Updated:
புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்!
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்!

‘மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரையும் சட்டசபைக்குள் புதுச்சேரி அரசு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய அந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், தங்கள் பலம் அதிகரித்திருப்பதாக உற்சாகத்தில் இருக்கிறது, பிரதான எதிர்க்கட்சியான     என்.ஆர்.காங்கிரஸ். ஆனால், ஆளும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான தி.மு.க, இதனால் அதிருப்தியில் உள்ளது. 

‘பி.ஜே.பி நியமன எம்.எல்.ஏ-க்களை எக்காரணம் கொண்டும் சட்டசபைக்குள் அனுமதிப்பதில்லை’ என்பதில் உறுதியாக இருந்தது நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு. ஆனால், உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, மூன்று எம்.எல்.ஏ-க்களும் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்று அரசு கடிதம் அனுப்பியது. அவர்கள் முதல்முறையாகப் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

புதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்!

இதன் பின்னணி குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் பேசினோம். “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதற்காகவும், நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் குறித்துப் பேசுவதற்காகவும் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் என அனைத்துக் கட்சி       எம்.எல்.ஏ-க்களும் டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்டோரைச் சந்திப்பதற்கு முடிவாகியிருந்தது. ஆனால், ‘ஆட்சிமாற்றம் செய்து உங்களை முதல்வர் ஆக்குகிறோம்’ என்று கூறி ரங்கசாமியை பி.ஜே.பி தரப்பு ஆஃப் செய்துவிட்டது. டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது, ‘ஆட்சியே போனாலும் அவர்கள் மூவரையும் உள்ளே விடமாட்டோம்’ என்று முதல்வர் நாராயணசாமி சொன்னார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை என்று கவர்னர் கிரண் பேடி உள்துறைக்கு அறிக்கை அனுப்பிவிட்டால், சட்டப்பேரவையை முடக்கும் நிலை ஏற்படலாம். அதனால், அவர்களை அனுமதித்துவிடலாம் என்று முதல்வரும் சபாநாயகரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். இது, ஒருவகையில் எங்களுக்குப் பின்னடைவுதான்” என்றனர்.

‘‘உச்ச நீதிமன்றம், வெறும் கருத்துதானே தெரிவித்திருக்கிறது. பிறகு ஏன் அவர்களை அனுமதித்தீர்கள்...” என்று இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சிக்காக வாதாடும் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், புதுச்சேரி காங்கிரஸ் தலைமையைக் கடிந்துகொண்டாராம்.

இன்னொருபுறம் தி.மு.க-வினரின் குமுறல் சத்தம் கேட்கிறது. “எல்லாப் பிரச்னைகளுக்கும் முதல்வர் நாராயணசாமிதான் காரணம். எங்களுக்கு நியமன எம்.எல்.ஏ பதவி தருகிறோம் என்று சொன்னார்கள். இப்போது, எங்களுக்கும் கிடைக்காமல், காங்கிரஸ்காரர்களுக்கும் கிடைக்காமல் போய்விட்டது. கூட்டணிக் கட்சியான எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல், அவர்கள் இஷ்டத்துக்கு பி.ஜே.பி நியமன எம்.எல்.ஏ-க்களை பேரவைக்குள் அனுமதித்து விட்டார்கள். இது எங்கள் கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை ஸ்டாலினிடம் கொண்டு சென்றுள்ளோம். அவரின் அறிவுறுத்தலின்படி, எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்” என்றனர் சூடாக.

‘உச்ச நீதிமன்ற எதிர்பார்ப்புக்கு இணங்க பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க இவர்கள் மூவரையும் அனுமதித்துள்ளேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 11-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரைதான் இந்த அனுமதி’ என்று சபாநாயகர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

சட்டமன்றத்துக்குள் அவர்களை அனுமதித்த போதிலும், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற தீர்மானத்தைக் குரல் வாக்கெடுப்பு மூலம் மிகவும் உஷாராக நிறைவேற்றியுள்ளது ஆளும் காங்கிரஸ் தரப்பு. ‘ஜனாதிபதி தேர்தலில் நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு வாக்குரிமை இல்லை’ என்பதைக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

- ஜெ.முருகன்
படம்: அ.குரூஸ்தனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism