Published:Updated:

மரக்காணம் கலவரத்தில் வீடு இழந்தவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்: ஜெயலலிதா

சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வீடு இழந்தவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறினார்.

மரக்காணம் கலவரம் மற்றும் தாக்குதல்கள் பற்றி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சியினர் தெரிவித்த கருத்துகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுகையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 9 நபர்களின் கூரை வீடுகள் முழுவதுமாகவும், ஒரு நபரின் கூரைவீடு பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மாட்டுக் கொட்டகை, பெட்டிக் கடை, வைக்கோல் போர் என 7 நபர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இதர வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் குடிசை வீடு மற்றும் இருவரின் கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா  50,000 ரூபாய் வழங்கப்படும். இதுவன்றி, கூரை வீடுகளை இழந்த அனைவருக்கும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும்.

##~~##
இந்தச் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பேர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25,000 ரூபாயும், புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று இல்லங்கள் திரும்பியுள்ள 17 நபர்களுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.