Published:Updated:

ஜாபர் அலி மீது பாய்ந்தது குண்டாஸ்!

ஜாபர் அலி மீது பாய்ந்தது குண்டாஸ்!
ஜாபர் அலி மீது பாய்ந்தது குண்டாஸ்!
ஜாபர் அலி மீது பாய்ந்தது குண்டாஸ்!

புதுக்கோட்டை: திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க.விலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஜாபர் அலி மீது மீண்டும் ஒரு கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, தற்போது அவர் மீது குண்டாஸ் பாய்ந்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த புதுக்கோட்டை நகர கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க.விலிருந்து விலக்கி வைக்கப்பட்ட ஜாபர் அலி வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க. கரை வேட்டியுடன் வந்தார். அப்போது அங்கு தயாராக இருந்த ஆளுங்கட்சியின் நகர செயலாளர் பாஸ்கர், ஜாபர்அலியை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, தகராறும் செய்தார்.

இது தொடர்பாக, ஜாபர் அலி மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, திருச்சி சிறையில் அடைத்திருந்தனர். ஜாபர் அலி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு, முத்தரையர் சங்கம் மற்றும் பல அமைப்புகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டியும், ஆர்ப்பாட்டமும் செய்திருந்தனர். ஆர்ப்பாட்டம் செய்தவர்களை காவல்துறை கைதும் செய்திருந்தது.

மேற்கண்ட வழக்கு தொடர்பாக ஜாபர் அலிக்கு கோர்ட்டில் ஜாமீன் கிடைத்திருந்தது. மறுநாள் கோர்ட்டுக்கு அழைத்து வரும் முன்னரே, மாரிமுத்து என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜாபர் அலி மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இதையடுத்து தற்போது அவர் மீது குண்டாஸ் பாய்ந்திருக்கிறது.

வீ.மாணிக்கவாசகம்