Published:Updated:

சீன ராணுவத்தை துரத்த உத்தரவிட மறுக்கிறது மத்திய அரசு: முலாயம் சிங் யாதவ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: சீன ராணுவத்தை துரத்த இந்திய ராணுவம் தயாராக உள்ளதாகவும், ஆனால் உத்தரவிட மத்திய அரசு மறுப்பதாகவும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

லடாக் பகுதியில் சீன படையினர் ஊடுருவிய பிரச்னையை, நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், இப்பிரச்னையில் மத்திய அரசு கோழைத்தனமாக நடந்துகொள்வதாகவும், சீன ராணுவத்தை துரத்த இந்திய ராணுவம் தயாராக இருந்ததாகவும், ஆனால் அதற்கு தேவையான உத்தரவை வழங்க மத்திய அரசு மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இப்பிரச்னை தொடர்பாக பேசுவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனா செல்ல இருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்த அவர், குர்ஷி அங்கு போய் கெஞ்சப்போகிறாரா? எனக் கேட்டனர்.

##~~##
அத்துடன் சீனாதான் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என்றும், பாகிஸ்தான் அல்ல என்றும் அவர் கூறினார்.
இதனை அடுத்து சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களுடன், பிஜூ ஜனதா தள உறுப்பினர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொண்டு இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.