Published:Updated:

ஊழல்; மோசமான நிர்வாகம்: கர்நாடகா பா.ஜ. அரசு மீது பிரதமர் கடும் தாக்கு!

ஹூப்ளி: பா.ஜனதா அரசின் மோசமான நிர்வாகம் மற்றும் ஊழலால் கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.

கர்நாடகாவில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஹூப்ளியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கர்நாடக பா.ஜனதா அரசின் நிர்வாகத் திறமையின்மையும், முன்னேற்ற நடவடிக்கைகளில் அலட்சியமும், ஊழலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதித்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

##~~##
மாநில அரசு வேளாண்மை மீதோ அல்லது வேலை வாய்ப்பு குறித்தோ சிறிதும் கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், ஏராளமான நீர்ப்பாசன திட்டங்கள் அரைகுறையாக முடிக்கப்படாமல் உள்ளதாகவும் கூறினார்.
மேலும் சிறுபான்மையினர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவுவதாகவும் மன்மோகன் தெரிவித்தார்.