Published:Updated:

ராமதாஸ் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு - பதற்றம்

ராமதாஸ் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு - பதற்றம்
ராமதாஸ் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு - பதற்றம்
ராமதாஸ் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு - பதற்றம்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் இன்று நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

மரக்காணத்தில் நிகழ்ந்த வன்முறையை சிபிஐ விசாரணை நடத்தக் கோரி இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

##~~##
இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. "பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பா.ம.க.வினர் பேச வாய்ப்பிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் இந்த அனுமதி மறுப்பால் விழுப்புரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.