Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

ருணாநிதி இறந்த ஒரே வாரத்துக்குள் கோஷ்டி சண்டைக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் அழகிரி. ‘கலைஞரின் விசுவாசிகள் என் பக்கம்தான் நிற்கிறார்கள்’ என்ற அவரின் ஸ்டேட்மென்ட், குபுகுபுவென அரசியல் கட்சிகளிடையே பற்றி எரிகிறது. தி.மு.க-வை விடுங்கள், அழகிரியின் இந்த ஸ்டேட்மென்ட் பற்றி மற்ற கட்சிகளின் மைண்ட்வாய்ஸ் என்னவாக இருக்கும்?

கம்பேரிஸன் கோவாலு!

ம.தி.மு.க:
தேய்ந்து காணாமல்போய்விட்ட மக்கள் நலக் கூட்டணியை தூசிதட்டி எழுப்ப வேண்டிய நேரமிது எனக் குதூகலிப்பார் வைகோ. தென்னாட்டுத் தளபதி தலைமையில் ‘ம.ந.கூ 2.0’ கோலாகலமாகத் தொடங்கும். என்ன ஒன்று... அழகிரி இந்த முகாமுக்குள் வரும்போதே ‘‘தம்பீ... போய்டுடுடுடுடு’’ என ஒரு வாய்ஸ் தூரத்திலிருந்து கேட்கும். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ஜி.கே.வாசன் சாயலில் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

அ.தி.மு.க:

ஒருபக்கம் ஸ்டாலின், இன்னொரு பக்கம் ரஜினி - கமல், அந்தப்பக்கம் திரும்பினால் தினகரன். இப்போது புதிதாக அழகிரி வேறு... ஏற்கெனவே வாங்கிவைத்திருக்கும் நல்ல பெயருக்குச் சிந்திச் சிதறித்தான் ஓட்டுகளே விழும். இதில் ஆளாளுக்கு ஓட்டுகளைப் பிரித்தால் நோட்டா கதியாகிவிடுமோ என ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணி குழப்பத்தில் இருந்தாலும் வியப்பேதுமில்லை.

நாம் தமிழர்:
இருக்கும் கட்சிகளிலேயே அழகிரி ஈஸியாக இணங்கக்கூடிய கட்சி இதுவாகத்தான் இருக்கும். முழுக்க முழுக்கத் தம்பிகள் என்பதால், அஞ்சாநெஞ்ச அண்ணனை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்குப் பிரச்னையே இருக்காது. இருதரப்பும் பிரமாண்டமாக இணைந்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், டிண்டர் என அனைத்துத் தளங்களிலும் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்வார்கள்.

பி.ஜே.பி:
ஏற்கெனவே நிழல் ஆளும்கட்சி எனப் பெயர் வாங்கியாயிற்று. இப்போது நிழல் எதிர்க்கட்சி என்றும் பெயர் வாங்கிவிடும் ஆசையில் முனைப்பு காட்டுவார்கள். இந்த முனைப்பில் கொஞ்சத்தைச் சொந்தக் கட்சியில் காட்டியிருந்தாலும் தாமரை இந்நேரம் தன்னாலே மலர்ந்திருக்கும். தாமரையையே ஒட்டுச்செடி ஆக்கிட்டீங்களேய்யா!

பா.ம.க:
‘ஒரு மகனின் கஷ்டம் இன்னொரு மகனுக்குத்தான் தெரியும்’ என அழகிரியை வாரி அணைத்துக்கொள்வார் அன்புமணி. ‘ஓவியாவைவிட ரெண்டு ஓட்டாவது நம்ம கூட்டணி அதிகம் வாங்கணும் ப்ரோ!’ என்று களமிறங்குவார்கள். ‘‘நார்த் ஆற்காடு எனக்கு, சவுத் ஆற்காடு உனக்கு... ஹைதராபாத் எனக்கு, செகந்திராபாத் உனக்கு’’ என்று இவர்களின் டீலிங்கே சூப்பர் சிரிப்பாக இருக்கும்.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz