Published:Updated:

முடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்!

முடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
முடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்!

முடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்!

‘கருணாநிதி இல்லாத காலத்தில் நடைபெற்றுள்ள முதல் தி.மு.க செயற்குழு’ என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளது ஆகஸ்ட் 14-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற செயற்குழு.

‘‘தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்ற ஒற்றை மந்திரத்தை உடன்பிறப்புகள் மத்தியில் ஓங்கி ஒலிக்க வேண்டும்... 50 ஆண்டு தி.மு.க-வின் வரலாற்றை மாற்றப்போகும் நிகழ்ச்சிக்கு முன்னோட்டம் நடத்த வேண்டும்... இந்த இரு காரணங்களை முன்வைத்தே இந்த அவசரச் செயற்குழுக் கூட்டம்” என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

தி.மு.க-வின் பொதுக்குழு ஆகஸ்ட் 19-ம் தேதி வானகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தி.மு.க தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவலும் உலவியது. ஆனால், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது.

முடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்!

இதற்கிடையே, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் அவசரச் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ம் தேதி கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்தது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அவரின் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும், கட்சியின் தலைமைக்குப் போட்டிகள் உருவாகும் என்ற செய்திகள் பரவின. ஆனால், கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், “அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே இருந்த மனக்கசப்பு நீங்கிவிட்டது. முரசொலி செல்வம் இரண்டு பேரிடமும் பேசிச் சமரசம் செய்துவிட்டார்’’ என்று சொன்னார்கள். இந்த நிலையில், 13-ம் தேதி கருணாநிதி நினைவிடத்துக்குத் தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தவந்த அழகிரி, ‘‘எனது ஆதங்கத்தை அப்பாவிடம் சொல்லியுள்ளேன். தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் என்பக்கம் இருக்கிறார்கள்” என்று கொளுத்திப்போட்டார்.

மறுநாள் செயற்குழு கூட்டப்படவிருந்த நிலையில் அழகிரியின் இந்த அறிவிப்பு, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என்ற எண்ணம் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் எழுந்தது. அதனால், அவசரச் செயற்குழுவில் வைத்தே தலைமைப் பதவிக்கு முன்னோட்டத்தை நடத்திவிடும் முடிவுக்கு ஸ்டாலின் வந்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் நம்மிடம், ‘‘வழக்கமான முறையில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றுதான் அனைவரும் எண்ணியிருந்தோம். ஆனால், சனிக்கிழமை இரவு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தலைமைக் கழகத்திலிருந்து ஓர் உத்தரவு வந்தது. ‘தி.மு.க-வின் 18 அணிகளின் செயலாளர்களையும் செயற்குழுக் கூட்டத்துக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து வாருங்கள்’ என்பதே அந்தத் தகவல். அதேபோல், தலைமைக் கழகத்திலிருந்தே கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு சென்றுள்ளது. அதனால்தான், செயற்குழுக் கூட்டமே பொதுக்குழுக் கூட்டம் போல அரங்கம் நிறைந்து காணப்பட்டது” என்றனர்.

கலைஞர் அரங்கம் நிரம்பியதால், வெளியே இருபுறமும் பந்தல் அமைத்து, வந்தவர்களை அங்கு அமர்த்தியிருந்தனர். மெரீனாவில் கருணாநிதிக்கு இடம்கிடைக்க சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் வில்சன், முதல் வரிசையில் அமரவைக்கப்பட்டார். அழகிரி சர்ச்சை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்பார்கள் என்பதாலோ என்னவோ, ஸ்டாலின் காரிலிருந்து இறங்கி அவசரமாக உள்ளே சென்றுவிட்டார். ஸ்டாலின் வந்ததும், அரங்கின் கதவுகள் மூடப்பட்டன. தாமதமாக வந்த 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பந்தலில் அமரவேண்டிய நிலையும் வந்தது.

தி.மு.க வரலாற்றிலேயே முதல்முறையாக வெளியே திரை அமைத்து செயற்குழுக் கூட்டத்தை அனைவரும் பார்க்கும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. டி.வி சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. எப்போதும் உள்ளே பத்திரிகை புகைப்படக்காரர்களை அனுமதிப்பார்கள். இம்முறை அதற்கு அனுமதி இல்லை. 

இந்தச் செயற்குழுவில் யார் யார் பேசவேண்டும் என்ற பட்டியலை ஏற்கெனவே ஸ்டாலினிடம் காட்டி ஒப்புதல் பெற்றனர். இரங்கல் தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் வாசித்தார். அதன்பிறகு ஆர்.எஸ்.பாரதி ஒவ்வொரு பெயராக அழைக்க, அவர்கள் வந்து பேசினர். அழகிரியைத் தாக்கிப் பேசவேண்டாம் என எல்லோருக்கும் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்!

அவசரச் செயற்குழு என்று சொல்லப் பட்டாலும், பேசிய அனைவருமே ஸ்டாலினைத் தலைவராக முன்மொழிந்தனர். அழகிரியின் அறைகூவலுக்குப் பதிலடியாகவே ஸ்டாலின் இந்தச் செயற்குழுவை நடத்தி, ‘தன் பின்னால்தான் கட்சி இருக்கிறது’ என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ‘‘ஸ்டாலின் தலைவர் என்ற நிலைக்கு வந்தபிறகு பாரபட்சம் காட்டாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும்’’ என்பதை ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் மறைமுகமாகச் சொன்னார்கள். ஜெ.அன்பழகன், ‘‘இன எதிரிகளை கருணாநிதியைப் போல நீங்களும் முறியடிக்க வேண்டும். குடும்ப உறவுகளுக்காகக் கட்சி விஷயங்களில் தொய்வை ஏற்படுத்தக் கூடாது” என்றார். இறுதியில் உருக்கமாகப் பேச்சைத் தொடங்கினார் ஸ்டாலின். மெரீனாவில் நடந்தவற்றை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், ‘‘கருணாநிதியின் லட்சியத்தைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’’ என்றார்.

வைகோவுக்கு இந்தக் கூட்டத்தில் மறைமுக அர்ச்சனைகள் நடந்தேறின. வைகோ பிரிந்தபோது தி.மு.க-வின் கட்சியும் கொடிக்கும் சிக்கல் வந்தபோது, கருணாநிதியின் மனநிலை குறித்து உருக்கமாகப் பேசினார் ஸ்டாலின்.  துரைமுருகனும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். கே.என்.நேருவும் வைகோ கட்சியை உடைத்தது பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். எதற்காக வைகோவை செயற்குழுவில் வசைபாடினார்கள் என்ற கேள்வியும் தி.மு.க-வினர் மத்தியில் எழுந்துள்ளது. அழகிரி பெயரை மறந்தும்கூட யாரும் உச்சரிக்கவில்லை. ஆனால், ‘வருங்காலத் தலைவர் ஸ்டாலின்’ என்பதை மட்டும் மறக்காமல் அனைவரும் சொல்லியமர்ந்தனர்.

- அ.சையது அபுதாஹிர்