Published:Updated:

வந்தவாசி கலவரம்: 675 பேர் வழக்கு (படங்கள்)

வந்தவாசி கலவரம்: 675 பேர் வழக்கு (படங்கள்)
வந்தவாசி கலவரம்: 675 பேர் வழக்கு (படங்கள்)

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 675 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

வந்தவாசி கலவரம்: 675 பேர் வழக்கு (படங்கள்)

“நேற்று மரக்காணம்…. இன்று வந்தவாசியா?.... என நடுநிலையாளர்கள் கவலை தெரிவிக்கும் அளவு அச்சமான சூழல் உருவாகியுள்ளது அங்கு. கடந்த சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமம் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த கார்த்திக் சிலம்பரசன் என்கிற இரு இளைஞர்கள் வந்தவாசிக்கு வந்துள்ளனர்.

அப்போது வழியில் செம்புர் என்ற பகுதியில் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 10 நபர்கள் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வந்தவாசி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 

வந்தவாசி கலவரம்: 675 பேர் வழக்கு (படங்கள்)

அவர்களை தாக்கியதாக கூறப்படுபவர்கள் அப்பகுதி வன்னியர் சமுதாயத்தினர் என்பதோடு, “மரக்காணத்தில் நீங்க அடிச்சிங்க இல்லடா இப்போ நீங்க வாங்கிக்கங்க" என்ற வார்த்தைகளை குறிப்பிட்டு தங்களை அடித்ததாக புகார் கூறினர்.

இதையடுத்து, பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க உடனே வழக்குப் பதிவு செய்யாமல் விசாரணைக்குப்பின் வழக்கு பதிவதாக காவல்நிலையத்தில் கூறப்பட்டது. இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட  14 கட்சிகள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
 

வந்தவாசி கலவரம்: 675 பேர் வழக்கு (படங்கள்)

தகவல் அறிந்து உடனடியாக மாவட்ட எஸ்.பி முத்தரசி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து கார்த்திக், சிலம்பரசனை தாக்கியதாக செம்புரை சேர்ந்த குப்பன், குமார் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிந்தது.

இதனிடையே, இரண்டு பேரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மறுதினம் அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 500 க்கும் மேற்பட்டோர் வந்தவாசியின் முக்கிய பகுதிகளில் மறியல் செய்தனர். இதனால் மீண்டும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதைக் கண்டித்து உள்ளுர் பா.ம.க.வினர்  சென்னாவரம், மாம்பட்டு, செம்புர், பாதிரி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர். இன்னோரு புறம் அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இந்த வழக்கில் தொடர் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தி வந்தவாசியில் உண்ணாவிரதம் இருந்தனர்.
 

வந்தவாசி கலவரம்: 675 பேர் வழக்கு (படங்கள்)

மாவட்ட எஸ்.பி  உள்ளிட்ட காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் வந்தவாசியில் முகாமிட்டு இருந்தும் பதற்றத்திற்கு  பயந்து வந்தவாசியின் பெரும்பாலான கடைகள் இரண்டு நாட்கள் அடைக்கப்பட்டிருந்தன.

##~~##
வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் இரு சமூகமும் கணிசமாக வாழும் வந்தவாசியில் இந்த சம்பவம் அடுத்தடுத்து எந்தவிதமான சூழலை ஏற்படுத்தும் என நடுநிலையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தற்போது, தற்காலிகமாக அமைதி நிலவினாலும் வந்தவாசியில் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கலவரம் தொடர்பாக பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 675 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.