Published:Updated:

பி.ஜே.பி-யின் பிதாமகன்!

பி.ஜே.பி-யின் பிதாமகன்!
பிரீமியம் ஸ்டோரி
News
பி.ஜே.பி-யின் பிதாமகன்!

பி.ஜே.பி-யின் பிதாமகன்!

அடல் பிஹாரி வாஜ்பாய் (1924- 2018)

ன்முகம் கொண்ட தலைவரும், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சியினராலும் பெரிதும் மதிக்கப்பட்டவருமான முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், 93-வது வயதில் காலமானார்.

சுதந்திர தினக் கொண்டாட சூழலில் தலைநகர் டெல்லி இருந்தபோது, கடந்த புதன்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வாஜ்பாயைப் பார்க்க பிரதமர் மோடி அவசர அவசரமாகச் சென்றார். அதைத் தொடர்ந்து, டி.வி சேனல்களிலும் சமூகவலைதளங்களிலும் வாஜ்பாய் உடல்நிலை குறித்த செய்திகள் பரபரக்கத் தொடங்கின.

கடந்த பல வருடங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார் வாஜ்பாய். அவரை புகைப்படத்தில் பார்த்துக்கூட பல வருடங்கள் ஆகிவிட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக மோடி பொறுப்பேற்றபோது, ஆசி பெறுவதற்காக வாஜ்பாயைச் சந்தித்தார். அவரது பிரைவஸியைக் கருத்தில் கொண்டு, அந்தப் புகைப்படம்கூட வெளியிடப்படவில்லை.

பி.ஜே.பி-யின் பிதாமகன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுமார் ஒன்பது வாரங்களுக்கு முன்பு வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகப் பாதையில் தொற்று, நெஞ்சகப் பகுதியில் அடைப்பு போன்ற பிரச்னைகள், மருத்துவர்களுக்குக் கடும் சவால்களாக இருந்துள்ளன. ஆகஸ்ட் 15-ம் தேதி, நிமோனியா காரணமாக அவரது நுரையீரல் செயல்திறன் மோசமடைந்தது. சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.

ஜனசங்கம் என்ற பெயரில் செயல்பட்டபோதும், ஜனசங்கம் உட்பட பல கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சி என்ற பெயரில் நாட்டை ஆண்ட காலத்திலும், ஜனதா கட்சி உடைந்து சிதறியபோது பி.ஜே.பி என்கிற புதிய பெயருடன் பிரிந்துவந்தபோதும்... வலதுசாரி சிந்தனையின் இலட்சிணையாகவே இருந்துவந்தவர் வாஜ்பாய். இடதுசாரி சிந்தனையாளர்களும் வாஜ்பாய்க்கு மிகுந்த மரியாதை அளித்தனர். சீன ஆக்கிரமிப்பின்போது சிதைந்த இந்திய - சீன உறவுக்கு புதியபாதை போடப்பட்டது, மொராஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக வாஜ்பாய் இருந்த காலகட்டத்தில்தான். பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்த லாகூருக்கு பஸ் போக்குவரத்தை அவர் அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியின்போது, பாகிஸ்தான் மண்ணிலிருந்து அந்த நாட்டு மக்களுக்கு அவர் சொன்ன வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை...

‘‘இன்று நான் இங்கு வந்தேன். நாளை இந்த இடத்தை விட்டுப் போய்விடுவேன். இடைப்பட்ட சிறிய இடைவெளியில், சமாதானமாக இருக்கவே பிரியப்படுகிறேன்” என்று உருக்கமாகப் பேசினார் வாஜ்பாய்.

பொக்ரான் அணுகுண்டு சோதனை நடைபெற்றபோதும், நாடாளுமன்றத்தில் தன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும்... வாஜ்பாய் நிகழ்த்திய உரைகள், பொருள் பொதிந்தவை; ஒரு கவிஞனுக்கே உரிய அழகியல், சமூகக் கோபம், இந்த தேசத்தைப் பற்றி அவருக்கு இருந்த கனவு, சக மனிதன்மீது அவருக்கு இருந்த கரிசனம் ஆகியவற்றை அந்த உரைகள் வெளிப்படுத்தின.

பண்பட்ட பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், தலைசிறந்த நிர்வாகி, நகைச்சுவை உணர்வுமிக்கவர், அற்புதமான சொற்பொழிவாளர் எனப் பன்முகம் கொண்ட, அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முதுபெரும் அரசியல் தலைவர் வாஜ்பாய். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பி.ஜே.பி-யின் பிதாமகன்!

- வேல்ஸ்