Published:Updated:

ஆர்ப்பாட்டத்துக்கு வருவாரா ராமதாஸ்? விழுப்புரத்தில் பதற்றம்

ஆர்ப்பாட்டத்துக்கு வருவாரா ராமதாஸ்? விழுப்புரத்தில் பதற்றம்
ஆர்ப்பாட்டத்துக்கு வருவாரா ராமதாஸ்? விழுப்புரத்தில் பதற்றம்
ஆர்ப்பாட்டத்துக்கு வருவாரா ராமதாஸ்? விழுப்புரத்தில் பதற்றம்

விழுப்புரம்: மரக்காணம் கலவரத்தை கண்டித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் இன்று நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. விழுப்புரத்தில் பா.ம.க.வினர் ஏராளமானோர் குவிந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

மரக்காணம் கலவரத்தை தடுக்கத் தவறிய காவல் துறையைக் கண்டித்து விழுப்புரத்தில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நேற்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, மரக்காணம் கலவரத்திற்கு காரணமாக பா.ம.க‍‍‍‍.வை குற்றம் சாட்டி இருந்தார்.

இதனிடையே, பா.ம.க சார்பில் இன்று விழுப்புரத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

போலீஸ் தடையை மீறி திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ராமதாஸ் அதில் நிச்சயம் கலந்து கொள்வார் என்றும் பா.ம.க நிர்வாகிகள்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான பா.ம.க.வினர் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.

##~~##
ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் ராமதாஸ் உட்பட அனைவரையும் கைது செய்யும் முடிவில் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்று காலை முதல் விழுப்புரத்தில் பதற்றம் நிலவி வருகிறது.