Published:Updated:

“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!”

“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!”

“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!”

“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!”

“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!”

Published:Updated:
“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!”

ன் பிறந்தநாளை முன்னிட்டுப் பனை விதைகளை விதைத்து, தமிழகத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஒரு தொடக்கப்புள்ளி வைத்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.  வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, இன்றைய தமிழக அரசியலின் சூடான விஷயங்கள் குறித்துப் பேசினேன்.

“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!”

“ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அ.தி.மு.க தொடர்ச்சியாகப் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. அதே பிரச்னை  கருணாநிதி மறைவுக்குப் பிறகு தி.மு.க-விலும் எழுந்திருக்கிறதே?”

“அ.தி.மு.க-வில் ஏற்பட்டதுபோல உட்கட்சிப் பூசல்களும் சலசலப்புகளும் தி.மு.க-விலும் ஏற்படலாம். ஆனால் அந்தக் கட்சி அதனால் பலவீனப்பட்டுவிடாது. தி.மு.க-வில் இருந்துதான் அ.தி.மு.க உருவானது, பிறகு ம.தி.மு.க-வும் உருவானது. அப்போதே தி.மு.க அழிந்துவிடும் என்று ஆரூடம் கூறினார்கள். மிகப்பெரிய அளவிலான இந்த இரண்டு பிளவுகளைச் சந்தித்த பிறகுதான் தேசிய அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக அந்தக் கட்சி உருவானது. அதனால் கலைஞர் தற்போது இல்லாத நிலையில் தி.மு.க. பிளவுபட்டுவிடும் என்பதை நான் ஏற்கப்போவதில்லை.”

“எந்தக் கூட்டணியில் இருந்தாலும் கருணாநிதியுடன் தொடர்ந்து நட்பில் இருந்தவர் நீங்கள். அவரது இழப்பு உங்களை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது?”

“மிக ஆழமாக. கல்லூரிக் காலத்திலேயே சில கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது இந்தி எதிர்ப்புப் போராட்ட சமயம். அதன்பிறகு ஒரு அரசியல் கட்சித் தலைவராக 2001-ல் இருந்து 2016 வரை அவருடன் பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஏறத்தாழ 25 ஆண்டுக்காலப் பழக்கம் அவருடன் எனக்கு இருந்தது. சிறிய, பெரிய கட்சிகள் என்கிற பாகுபாடெல்லாம் அவரிடம் இல்லை. தலைவர்களை ஒரே மாதிரி அரவணைக்கத் தெரிந்தவர். என் பொன்விழா நிகழ்வில் கலந்துகொண்டவர் ‘நானும் தம்பி திருமாவளவனும் பொதுவாழ்வுக்காக எங்களை அர்ப்பணித்துக்கொண்டு அதில் வெற்றியும் கண்டவர்கள்’ என்று தன்னு டன் என்னை ஒப்பிட்டுப் பேசினார். 

மாற்றுக்கருத்துகளைச் சொன்னால் முகம் சுளிக்கமாட்டார். குறிப்பாக தி.மு.க. மேடைகளில் நான் ஈழப் பிரச்னை குறித்தும் விடுதலைப் புலிகளை ஆதரித்தும் நிறைய பேசி யிருக்கிறேன்.அதையெல்லாம் வரவேற்றிருக்கிறார். 2009-ல் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்கூட, ‘தி.மு.க - வி.சி.க இடையேயான கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி’ என்று கூறியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமே இப்படியொரு சான்றை அவர் வழங்கியிருக்கிறார்.  ஈழத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் நான் கேட்காமலேயே என்னை இணைத்தார். டெசோ அமைப்பை மீண்டும் தொடங்கியபோது அதில் என்னையும் ஒரு அங்கமாக்கினார். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் தேர்தல், அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீடு, சுரதாவுக்குச் சிலை, பஞ்சமி நிலங்களுக்கான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், தர்மபுரிப் பேருந்து எரிப்புச் சம்பவத்தில் தி.மு.க தனி ஆய்வுக்குழு ஒன்றை வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று நான் முன்வைத்த பல  கோரிக்கைகளை உடனுக்குடன் செய்தார். ஆனால் சென்னையில் நான் தங்குவதற்கு இடமில்லை, வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் எல்லோரையும் போல எனக்கு ஒரு வாடகை வீடு வேண்டும் என்று அவரிடம் கடிதம் கொடுத்தேன். எல்லோருக்கும் இடம் கொடுக்கும்போது தம்பி திருமாவுக்கு இடமில்லையா என்று தனது தனிச்செயலாளரிடம் கடிந்துகொண்டார். ஆனால் மூன்று நான்கு முறை கடிதம் கொடுத்தபோதும் எனக்கான ஒதுக்கீடு ஏனோ கிடைக்கப் பெறவில்லை. இன்றைக்கு வரை கல்வி நிறுவனம் ஒன்றின் பத்துக்குப் பத்து அறையில்தான் தங்கியிருக்கிறேன்.கடிதம் கொடுக்கத் தற்போது கலைஞர் இல்லை.

தமது கட்சித் தொண்டர் இல்லத்துத் திருமண மேடையில்கூட நான் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், அதனைத் தானே முன்னின்று நடத்த விரும்புவதாகவும் வாஞ்சையுடன் தெரிவித்தவர் அவர்.கலைஞர் கருணாநிதிக்கு தனிப்பட்ட முறையில் என்மீது சில வருத்தங்கள் உண்டு. குறிப்பாக 2001-ல் மங்களூர்த் தொகுதியில் இருந்து தி.மு.க கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்தப் பதவியை ராஜினாமா செய்தேன். அது அவருக்கு மிகப்பெரும் வருத்தமாக அமைந்தது. அதன் பிறகு என் கட்சி உறுப்பினர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அதைக் குறித்து வருத்தப்பட்டிருக்கிறார்.

“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!”

அவருக்கு நான் என்னுடைய கட்சி சுவரொட்டிகளில் பெரியாரையும்  அம்பேத்கரையும் பதிவிடுகிறேனே ஒழிய அண்ணாவை அதில் சேர்ப்பதில்லை  என்கிற சிறு வருத்தம் இருந்தது. ஆனால், பெரியார் என்றாலே அதில் கலைஞரும் அண்ணாவும் அடக்கம் இல்லையா?”

“கருணாநிதி இல்லாத தி.மு.க-வுடன் உங்கள் கட்சியின் உறவு ஆரோக்கியமாக நீடிக்குமா?”

“கருணாநிதி இருந்தபோதே 2011 மற்றும் 2016-ம் வருடங்களில் அந்தக் கட்சி சந்தித்த தேர்தல்களை ஸ்டாலின்தான் முன்னின்று நடத்தினார். எங்களுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் நடத்தினார். காவிரிப் பிரச்னை தொடர்பான நடவடிக்கைகளில்கூட இருதரப்பும் இணைந்தே நீண்ட பயணம் மேற்கொண்டோம். அதனால் செயல்தலைவராக ஸ்டாலின் இருந்தபோது இருந்த தி.மு.க-வுடனான எங்கள் நட்புறவு, கலைஞர் இல்லாத சூழலிலும் நீடிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. 

“காங்கிரஸுடன் யார் கூட்டணி என்பதில் தி.மு.க-வுக்கும் வி.சி.க-வுக்கும் இடையே தொடர்ந்து போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறதே?”

“வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் கொண்டுவந்த திருத்தத்தை மாற்றி அமைக்கக் கோரி நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே ராகுல்காந்தியை டெல்லியில் நாங்கள் சந்தித்தோம்.

2014-ம் வருடத் தேர்தல் முடிவுகள் கொடுத்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். இதில் தி.மு.க-வும் அடக்கம். தி.மு.க மற்றும் இடதுசாரிகள் அல்லாத காங்கிரஸ் உடனான கூட்டணி என்பது விடுதலைச் சிறுத்தைகளின் எண்ணம் இல்லை. தி.மு.க-வுக்கும் இந்தப் புரிதல் இருக்கிறது.”

“2016 வருடத் தேர்தலில் உங்கள் மக்கள் நலக் கூட்டணி எடுபடவில்லையே... வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி எதன் அடிப்படையில் இருக்கும்?”


“தமிழக அரசியல் களமும் தேசிய அரசியல் களமும் வேறுவேறு. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள்தாம் தலைமை தாங்குகின்றன. எனவேதான் தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் அடங்கிய ஒரு மெகா கூட்டணியை வலியுறுத்திவருகிறோம்.”

“தொடக்க காலத்தில் தலித்துகளுக்கான கட்சி என்றே வி.சி.க-வை அறிமுகம் செய்தீர்கள். ஆனால் அண்மைக்காலங்களில் ‘பொதுமக்களுக்கான கட்சி’ என்று மேடைகளில் கூறிவருகிறீர்களே?”

“ஒட்டுமொத்தத் தமிழக நலனுக்காக, மாநில உரிமைக்காக, விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கம், அரசியல் கட்சியாக மட்டுமே இருக்க முடியும். அதனால்தான் தலித் அல்லாதவர்களிடத்திலும் வி.சி.க-வின் மீதான மதிப்பு உயர்ந்திருக்கிறது. குறிப்பிட்ட சாதி சங்க மாகவே எங்கள் இயக்கம் இருக்க வேண்டும் என்று எண்ணும் சாதிய வாதிகள்தாம் எங்கள் மீது இப்படியான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.இது உழைக்கும் மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கம்.”

“ ‘தலித் என்கிற சொல்லே தவறு. எங்களை தலித் என்று அடையாளப்படுத்தாதீர்கள்’ என்று பட்டியலினச் சாதிகளில் ஒரு தரப்பினர் கூறுகிறார்களே?”


“தலித் என்பது International terminology. அதிகாரம்  மறுக்கப்பட்ட வர்கள், உரிமைகள் சுரண்டப்பட்டவர்கள், விளிம்புநிலை மனிதர்கள் என உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் மக்களும் தலித்துதான். இந்தியாவில் மட்டும் ‘தலித்’ என்கிற சொல்லாடல் குறிப்பிட்ட சாதிக்கான அடையாளமாகப் பார்க்கப்படுவது அறியாமை. அது திருத்திக்கொள்ளப்பட வேண்டியதே.”

ஐஷ்வர்யா - படம்: ப.சரவணகுமார்

ஓவியம்: பாரதிராஜா