இந்தியாவில் அதிகமான சொத்துகள் வைத்திருக்கும் கட்சிகளில், தி.மு.க-வும் ஒன்று. கருணாநிதியின் வாரிசுகளில் ஒருவரான அழகிரி, கட்சிக்குள் நடத்திக்கொண்டிருக்கும் யுத்தத்தின் பின்னணியில் இருக்கும் காரணங்களில் இந்தச் சொத்துகளும் அடக்கம்!

தி.மு.க., அமைப்புரீதியாக பலம் வாய்ந்தது. அதற்கு நிகராக, அந்தக் கட்சியின் வருமானமும், சொத்துகளும் உள்ளன. தன் சொத்துகளைப் பராமரிப்பதற்காக, ‘சொத்துப் பாதுகாப்புக் குழு’ என்று தனியாக ஒரு நிர்வாகக் குழுவையே வைத்துச் செயல்படும் கட்சி, அநேகமாக இந்தியாவிலேயே தி.மு.க மட்டும்தான். தி.மு.க-வின் சொத்துகள், தி.மு.க அறக்கட்டளையின் சொத்துகள், முரசொலி அறக்கட்டளையின் சொத்துகள் என அந்தக் கட்சியின் சொத்துகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகின்றன. இந்த மூன்றையும் நிர்வாகம் செய்ய, தனித்தனி நிர்வாகக் குழுக்கள்; தனித்தனி ஆடிட்டர்கள்; அவற்றைக் கண்காணிப்பதற்குத் தணிக்கைக் குழுக்கள் என கார்ப்பரேட் கம்பெனிகளைப் போன்ற கட்டமைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க.

அதிகமான சொத்துகளை தன்வசம் வைத்திருக்கும் தி.மு.க அறக்கட்டளையில் மு.க.ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தவிர, கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் யாரும் அதில் இல்லை. அதுதான் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம் என்று அறிவாலய வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.

இதுபற்றிக் கேள்வி எழுந்தபோது, “அப்படி ஒன்றும் இல்லை” என்று அழகிரி மறுத்தார். ஆனால், அழகிரியின் மகன் துரை தயாநிதி, “பிரச்னைக்கு அது ஒரு காரணமல்ல. ஆனாலும் கட்சியின் சொத்துகள் எவ்வளவு, அறக்கட்டளையின் சொத்துகள் எவ்வளவு, அறக்கட்டளைகளில் யார் யார் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்ற விவரங்கள் வெளிப்படையாக இல்லை. அவை, ரகசியமாக வைக்கப்பட்டிருப்பது ஒரு பிரச்னைதான். அதை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று தனக்கு நெருக்கமான சிலரிடம் ஆதங்கப்பட்டுள்ளார்.

சரி, மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் தி.மு.க-வின் சொத்துகள்தான் எவ்வளவு, என்கிற தேடலை ஆரம்பித்தோம். ‘தி.மு.க அறக்கட்டளை’ மற்றும் ‘முரசொலி அறக்கட்டளை’யின் சொத்து விவரங்கள் வெளிப்படையாக இல்லை. ஆனால், தி.மு.க கட்சியின் சொத்து விவரங்கள், அவர்கள் தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கின் அடிப்படையில் நமக்குக் கிடைத்தன. அந்த விவரங்கள் இங்கே இடம்பெறுகின்றன. சும்மா தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்... அழகிரியின் கோபத்துக்கான காரணம் புரியும்.

2016-17 வருமானவரி வரவு செலவுக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டதன்படி...

கையிருப்பு நிதி 2015-16 இறுதியில் - ரூ.2469882686.18
(இருநூற்று 46 கோடியே 98 லட்சத்து 82 ஆயிரத்து 686 ரூபாய்).

கையிருப்பு நிதி 2016-17 தொடக்கத்தில் - ரூ.1651234175.72
(165 கோடியே 12 லட்சத்து 34 ஆயிரத்து 175 ரூபாயாகக் குறைந்துள்ளது.)

(ஒரு வருடத்தில் கையிருப்பு நிதி 100 கோடி ரூபாய்க்கு மேல் குறைந்தற்கு காரணம், 2016-ம் ஆண்டு வந்த சட்டமன்றத் தேர்தல் செலவுகள் என்று தி.மு.க தனது வரவு செலவுக் கணக்கில் கணக்குக் காட்டியுள்ளது.)

வாகனங்கள்!

மோட்டார் வாகனங்கள், டாட்டா சுமோ கார்கள், பிரசார வேன், டாட்டா சபாரி கார், ஏ.சி., ஜெராக்ஸ் மெஷின், ஃபேக்ஸ் மெஷின், டைப் ரைட்டர், ஜெனரேட்டர், டொயோட்டா அல்பர்டு கார், மெர்சிடிஸ் பென்ஸ் கார். இவற்றின் மொத்த மதிப்பு - ரூ.27473883.81 (இரண்டு கோடியே 74 லட்சத்து 73 ஆயிரத்து 883 ரூபாய்)

அசையாச் சொத்துகள்!

அன்பகம் நிலம், தஞ்சாவூர் நிலம், திருப்பூர் நிலம், திருச்சி நிலம் மற்றும் பிற மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நிலம் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலங்களின் மொத்த மதிப்பு ஏழு கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 958 ரூபாய் என்று மதிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மொத்தமாக நிலத்தின் மதிப்பு - ரூ.74152958.20

கையிருப்பு நிதி போக மற்ற சொத்துக்கள்

அசையாச் சொத்துக்கள் - ரூ.19,19,90,562.00 (19 கோடியே 19 லட்சத்து 90 ஆயிரத்து 562 ரூபாய்)
முதலீடுகள் - ரூ.2750.00

கட்டடங்கள்!

அறிவகம், அன்பகம், சேலம் அழகாபுரம் கட்டடம், காஞ்சி திராவிட நாடு கட்டடம், வட ஆற்காடு கட்டடம், தஞ்சை கட்டடம், திருப்பூர் கட்டடம், கலைஞர் அறிவாலயம் - திருச்சி, சேலம் கட்டடம் மற்றும் இந்தக் கட்டடங்களின் உள்கட்டமைப்பு வேலைகள், மரச்சாமான்கள், அலுவலகப் பொருள்கள், மின்சாத
னங்கள், தீயணைப்புச் சாதனங்கள், ஜெனரேட்டர் போன்றவை இதில் மதிப்பிடப்பட்டுள்ளன. அதன் மொத்தச் சொத்து மதிப்பு - ரூ.90308930.32 (ஒன்பது கோடியே 30 லட்சத்து 8 ஆயிரத்து 930 ரூபாய்)

வங்கி முதலீடுகள்!

வங்கியில் உள்ள தொகை:
ரூ.16114821.54 ( ஒரு கோடியே 61 லட்சத்து 14 ஆயிரத்து 821 ரூபாய்)
நிரந்தர வைப்புத்தொகை -
ரூ.1620769648.00 ( 162 கோடியே 7 லட்சத்து 69 ஆயிரத்து 648 ரூபாய்)
கடன் கொடுத்த வகையில் வரவு -
ரூ.4806370.00 (48 லட்சத்து 6 ஆயிரத்து 370 ரூபாய்)

வங்கி நிரந்தர வைப்பு நிதி!

தேனாம்பேட்டை இந்தியன் வங்கி, புதுக்கோட்டை கனரா வங்கி, ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி, கரூர் இந்தியன் வங்கி, திருவல்லிக்கேணி இந்தியன் வங்கி ஆகியவற்றில் தி.மு.க-வுக்கு நிரந்தர வைப்பு நிதி உள்ளது. அதன் மொத்த மதிப்பு - ரூ.1620769648.00
(162 கோடியே 7 லட்சத்து 69 ஆயிரத்து 648 ரூபாய்)

கட்சி வளர்ச்சி நிதி வருமானம்!

கட்சி வளர்ச்சி நிதி, உறுப்பினர் கட்டணம், உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் விற்பனை, மகளிர் அணி உறுப்பினர் கட்டணம், மாணவரணி, இளைஞர் அணி, வழக்கறிஞரணி, பொறியாளர் அணி, அறிவகம் வருமானம், வங்கி வட்டி மூலம் வரும் வருமானம், தேர்தல் வேட்பாளர் கட்டணம், பதிப்பகம் மூலம் வரும் வருமானங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் வாடகை மற்றும் வட்டி வருமானம் கட்சியின் வருமானங்களாகக் காட்டப்பட்டுள்ளது. அப்படிக் கிடைக்கும் மொத்த வருமானம்- ரூ.856619897.71 (85 கோடியே 66 லட்சத்து 19 ஆயிரத்து 897 ரூபாய்)

செலவுகள்!

கட்சி நிர்வாகிகள் நல நிதிச் செலவு
சாத்தூர் பாலகிருஷ்ணன், தீப்பொறி ஆறுமுகம், காவிரி டெல்டா விவசாயிகள் குடும்ப நிதி உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட நலநிதிச் செலவுகள் மொத்தம் - ரூ.847000
(8 லட்சத்து 47 ஆயிரம்)

பராமரிப்புச் செலவுகள்!

கார் மற்றும் வாகனங்கள், ஏ.சி., கட்டங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றைப் பராமரித்த வகையில் செலவுகள் - ரூ.2989778.00 (29 லட்சத்து 89 ஆயிரத்து 778)
அலுவலகச் செலவுகள் - ரூ.12448983 ( ஒரு கோடியே 24 லட்சத்து 48 ஆயிரத்து 983 ரூபாய்)

தேர்தல் செலவுகள்!

உள்ளாட்சித் தேர்தல் சட்டச் செலவுகள், கட்சித் தொப்பிகள், சின்னங்கள், மப்ளர்கள், கரை வேட்டிகள், வாகனச் செலவுகள், பயணச் செலவுகள், தேர்தல் அறிக்கை அச்சிட்ட செலவு, காகிதங்கள் வாங்கிய செலவு, தேர்தல் விளம்பரம் மற்றும் பிரசாரச் செலவுகள், சட்டமன்றத் தேர்தல் செலவுகள், கூட்டங்களுக்குச் செலவிட்ட தொகை எனத் தேர்தல் செலவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தத் தேர்தல் செலவு - ரூ.930037350.13 ( 93 கோடியே 37 ஆயிரத்து 350 ரூபாய்)

கட்சி வளர்ச்சிக்கு!

கூட்டங்கள் தொடர்பான செலவுகள், பயணம், பிரசாரம் மற்றும் விளம்பரம், விண்ணப்பங்கள் அச்சிட்டது, சட்டச் செலவுகள், புத்தகங்கள் அச்சிட்ட செலவு, முப்பெரும் விழாச் செலவுகள் கணக்கில் காட்டப்பட்டுள்ளன. மொத்தச் செலவு - ரூ.14685528 ( ஒரு கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 528 ரூபாய்)

இந்தச் செலவுகள் எல்லாம் போக, தி.மு.க-வின் சொத்து மதிப்பு (முரசொலி அறக்கட்டளை - தி.மு.க அறக்கட்டளை சொத்துகள் இந்தக் கணக்கில் வரவில்லை. அவை தனி!) 2016-17 ஆண்டில் மொத்தமாக தி.மு.க-வின் சொத்து மதிப்பு ரூ.1833684151.72 (183 கோடியே 36 லட்சத்து 84 ஆயிரத்து 151 ரூபாய்).

ஆஸ்தி, அதிகாரம் என்றாலே பிரச்னைதான். இவை இரண்டும் தி.மு.க மற்றும் கருணாநிதி குடும்பத்தில் எக்கச்சக்கமாக இருக்கும்போது, பிரச்னை வெடிக்காமலா இருக்கும்!

- ஜோ.ஸ்டாலின்