அனல் கக்கும் அழகிரியின் ‘மனசாட்சி’

“அண்ணன் அழகிரி, தி.மு.க-வுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது போலவும், அவரால் கட்சி வளர்ச்சியடையவில்லை என்பது போலவும் சிலர் பேசிவருகிறார்கள். அண்ணன் எப்போதுமே, தான் செய்த விஷயங்களை வெளியே சொல்லமாட்டார். தற்போதைய சூழலில், அவற்றையெல்லாம் நாங்கள் கூற வேண்டியுள்ளது. ஸ்டாலின் வகித்த பொருளாளர் பதவி, துணை முதல்வர் பதவி என அனைத்துமே அழகிரி அண்ணனின் ஒப்புதலில் கிடைத்தவைதான்’’ என்று அதிரடியாகப் பேச ஆரம்பித்தார், அழகிரியின் ‘மனசாட்சி’ என்று சொல்லப்படும் மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டலத் தலைவரான இசக்கிமுத்து

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்காக சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி அழகிரி தலைமையில் அமைதிப்பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இது, தி.மு.க-வுக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இசக்கிமுத்துவிடம் பேசினோம்.

“2009 நாடாளுமன்றத் தேர்தலில், மதுரையில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணன் அழகிரி ஜெயித்தார். அதுவரை, மதுரை எம்.பி தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றதில்லை. அந்த வரலாற்றை அழகிரி மாற்றினார். கட்சிப் பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமிக்கு உடல் நலமில்லாமல் இருந்ததால், அவர் வகித்த பொறுப்பை ஸ்டாலினுக்கு வழங்க நினைத்தார் கலைஞர். அதற்காக நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரை மதுரைக்கு அனுப்பி அழகிரியிடம் ஒப்புதல் கேட்டார்கள். அண்ணன், பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். அண்ணனால்தான், ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி கிடைத்தது. 2006-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., 98 எம்.எல்.ஏ-க்களுடன் மைனாரிட்டி அரசாக இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, அமைச்சரவையில் இடம்பெற காய் நகர்த்தியது காங்கிரஸ் கட்சி. அந்த நிலையில்தான் திருமங்கலம், மதுரை மத்தி, மதுரை மேற்கு, கம்பம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய இடைத்தேர்தல்களில் தி.மு.க-வை அமோக வெற்றியடைய வைத்தார் அழகிரி. கே.கே.எஸ்.எஸ்.ஆர்., அனிதா ராதாகிருஷ்ணன், கம்பம் ராமகிருஷ்ணன் போன்றவர்களைக் கட்சிக்கு அவர் இழுத்துவந்தார்.

மத்திய அரசில் பவர்ஃபுல்லான கேபினட் அமைச்சராக அழகிரி இருந்தார். அது, ஸ்டாலின் தரப்பினருக்குக் கண்ணை உறுத்தியது. ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வேண்டுமென்று கோரினார்கள். அதை, கலைஞர் உடனே வழங்கிடவில்லை. அண்ணனிடம் ஒப்புதல் கேட்டார்கள். அப்போதும் பெருந்தன்மையாக அழகிரி ஒப்புக்கொண்டார். இப்படி ஸ்டாலினுக்கு எல்லாப் பதவிகளும் அண்ணனால்தான் கிடைத்தது. இதை ஒருநாள்கூட அவர் சொல்லிக்காட்டியதில்லை. அப்படிப்பட்டவரை, கட்சியில் இணைக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். 2014 நடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வின்போது, கட்சிக்குச் சம்பந்தமே இல்லாதவர்களை சபரீசன் சிபாரிசில் தேர்வுசெய்தார் ஸ்டாலின். அந்த நபர்கள் தேர்தலில் தோற்றவுடன், தங்கள் வியாபாரத்தைக் கவனிக்கப் போய்விட்டார்கள். உண்மையான கட்சிக்காரர்களுக்கு சீட் கொடுத்திருந்தால் அப்படிப் போயிருப்பார்களா?

வேண்டியவர், வேண்டாதவர் என்று வேட்பாளர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தலைமை நிலையச் செயலாளர் கல்யாணசுந்தரம்மீது தலைவரிடம் ஹாங்காங் செல்வதற்கு முன்பாக, அழகிரி புகார் செய்தார். கல்யாணசுந்தரம், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது, ‘வருத்தப்படாதே. நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு, முறையாக நடைபெறவில்லை. நீ ஹாங்காங் சென்று வா. இந்தத் தேர்தலில் அவர்கள் அதற்குத் தண்டனை அனுபவிப்பார்கள்’ என்று சொன்னார். அதற்குப்பின் கலைஞரை, அண்ணன் சந்திப்பதைத் தடுத்து விட்டார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் முன்பு போட்டியிட்ட சிம்லா முத்துசோழனை மீண்டும் நிறுத்தியிருந்தால், வெற்றி கிடைத்திருக்கும். ஆனால், சபரீசன் சொன்னதற்காக ஒருவரை நிறுத்தினார்கள். மிக மோசமான தோல்வி ஏற்பட்டது. இதை ஆய்வுசெய்த ஸ்டாலின், விலைபோன நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுத்தார். ஆனால், மாவட்டச் செயலாளர் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது பொதுக்குழுவில் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்குத் தேர்தல் நடத்த உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் இன்னும் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதுவே முறையற்ற செயல்தான். அழகிரியை கழகத்தில் இணைத்துக்கொண்டால், தனக்கு எதிராக வந்துவிடுவார்... தன் செயல்பாட்டால் தொண்டர்களைக் கவர்ந்து விடுவார் என்று அச்சப்படுகிறார் ஸ்டாலின். கட்சியிலுள்ள சில நிர்வாகிகளுக்கும் அழகிரி வருவது பிடிக்கவில்லை. அழகிரியை பொறுத்தவரையில் தொண்டர்களிடம் நேரடியாகப் பேசுபவர். அவர்களின் வேலைவாய்ப்பு, குடும்ப வளர்ச்சிக்கு உதவி செய்பவர். அதனால்தான் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட நிர்வாகிகள், கட்சியினர் அவர்மீது பற்றுதலுடன் உள்ளார்கள். கலைஞர் மகன் என்பதால் ஜெயலலிதா ஆட்சியில் பல நெருக்கடிகளுக்கு ஆளானவர் அழகிரி. அவர் உருவாக்கிய கல்லூரியை நடத்தவிடாமல் பல முட்டுக்கடைகளைப் போட்டார்கள். மதுரையில் கட்டிய தயா சைபர் பார்க்கை செயல்படுத்தவிடாமல் செய்தார்கள். பொய் வழக்குகளைப் போட்டார்கள். அதையெல்லாம் கடந்துதான் கழகத்தை அவர் காப்பாற்றிவருகிறார்’’ என்றார்.

இப்போது, அழகிரி ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். வரும் காலத்தில் அழகிரியே பல விஷயங்களைப் பேசுவார் என்கிறார்கள் மதுரை வட்டாரத்தில்.

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்