''அரசாளும் மன்னன் அரசனாக மட்டுமே நடந்துகொள்ள வேண்டும்; கணவனாகவோ, தகப்பனாகவோ, நண்பனாகவோ நடந்துகொள்ளக் கூடாது. அப்படி நடந்துகொள்ளும் மன்னன் தன்னையும் தன் நிர்வாகத்தையும் தானே சீரழித்துக்கொள்வான்!'' என்றார் சீனத் தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ். அன்றைய தத்துவங்கள் இன்றைய அரசாள்வோருக்கும் பொருந்தக்கூடியவை. கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தனது நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா வையும் அவர் பெயரால் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அவருடைய சுற்றத்தாரையும் விலக்கி இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கை இதனாலேயே பாராட்டுக்கு உரியதாகிறது!

இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பை மக்கள் அவரிடம் கொடுத்தபோது, தோழியும் தோழியைச் சார்ந்தவர்களும் எப்படி எல்லாம் நிழலாட்சி புரிந்தார்கள் என்பதை மறக்க முடியாது. மூன்றாம் முறையாக அவருக்கு மக்கள் வாக்களித்தது இனி ஒரு முறை அதுபோன்ற தலையீடுகளையும் சுயநல முறைகேடுகளையும் ஜெயலலிதா அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்தான். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டியது அவருடைய கடமையும்கூட!

ஆனால், அதிகாரம் பறிபோன 'நிழல் அரசியல்வாதி’களோ ருசி கண்ட பூனைக்கு ஒப்பானவர்கள். அளவில்லாத செல்வத்திலும் செல்வாக்கிலும் திளைத்து மகிழ்ந்த அவர்கள், 'இழந்த சொர்க்க’த்தை மீட்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எனவே, தான் எடுத்த முடிவில் எஃகு போல் உறுதியாக இருக்க வேண்டும் முதல்வர். அப்போதுதான், இப்போதைய நடவடிக்கை நாட்டு நலன் கருதியே என்ற நம்பிக்கை மக்களிடம், குறிப்பாக வாக்காளர்களிடம் ஏற்படும். அதேபோல, 'வால் போய் கத்தி வந்த கதை’யாக, 'ஆலோசகர்கள்’ என்ற பெயரில் புதிதாக இன்னொரு நிழல் அதிகார மையம் உருவாகவும் இடம் கொடுக்காமல் முதல்வர் பார்த்துக்கொள்ள வேண்டும். 'தமிழ்நாட்டு மக்கள்தான் என் குடும்பத்தினர்’ என்று அடிக்கடி சொல்லும் முதல்வர் ஜெயலலிதாவின் வார்த்தைகளே அவருடைய புத்தாண்டுச் சபதமாக அமையட்டும்!