Published:Updated:

அடுத்து நீதிமன்றத்தில் உண்ணாவிரதம்: பரஞ்சோதி மீது வழக்கு தொடர்ந்த ராணி ஆவேசம்

அடுத்து நீதிமன்றத்தில் உண்ணாவிரதம்: பரஞ்சோதி மீது வழக்கு தொடர்ந்த ராணி ஆவேசம்
அடுத்து நீதிமன்றத்தில் உண்ணாவிரதம்: பரஞ்சோதி மீது வழக்கு தொடர்ந்த ராணி ஆவேசம்
அடுத்து நீதிமன்றத்தில் உண்ணாவிரதம்: பரஞ்சோதி மீது வழக்கு தொடர்ந்த ராணி ஆவேசம்

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீதான வழக்கில் இரண்டு வருடங்கள் ஆகியும் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை, இதே நிலை நீடித்தால் நீதிமன்றத்தில் உண்ணாவிரதம் இருப்பேன் என்று டாக்டர் ராணி ஆவேசமாக கூறினார்.

கடந்தமுறை திருவரங்கம் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரஞ்சோதி, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பின்னர், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சையின் மறைவை தொடர்ந்து இவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அ.தி.மு.க தலைமையினால், இவர் வெற்றிபெற்ற பின்னர் அமைச்சராகவும் ஆக்கப்பட்டார்.

இதற்கு முன்பாகவே இவர் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டதாகவும், நகைகைகளை அபகரித்துக்கொண்டதாகவும் டாக்டர் ராணி என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்ததால் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குப்பதிய உத்தரவிடுமாறு முறையிட அந்த வழக்கை ஏற்று திருச்சி நீதிமன்றத்தை அணுக டாக்டர் ராணிக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

##~~##
வழக்கை நீதிமன்றம் ஏற்றதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பரஞ்சோதி. கிட்டத்தட்ட இரண்டாண்டு காலமாக நடந்துவரும் இந்த வழக்கில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிபதி வேல்மயில் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்றைக்கு வழக்கு விசாரணைக்கு திருவரங்கம் காவல் உதவி ஆணையர் ஜெயச்சந்திரன் ஆஜராகாததால் வழக்கை நீதிபதி 30.05.13 உத்தவைத்து உத்தரவிட்டார்.
 
அடுத்து நீதிமன்றத்தில் உண்ணாவிரதம்: பரஞ்சோதி மீது வழக்கு தொடர்ந்த ராணி ஆவேசம்

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த டாக்டர் ராணி, "கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை நெருங்கப்போகிறது என்னுடைய வழக்கு. ஆனால் இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. உதவி ஆணையர் மதுரை ஐகோர்ட்டுக்குக்கு வழக்கு விஷயமாக சென்றிருப்பதாக நீதிமன்றத்தில் கூறுகின்றனர் காவல்துறைனர். இதே நிலை நீடித்தால் அடுத்த முறை நீதிமன்றத்திலேயே உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்" என்றார் ஆவேசமாக.

பொதுமக்களும், பத்திரிக்கையாளர்களும் பெருமளவில் நீதிமன்ற வளாகத்தில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

ப்ரீத்தி கார்த்திக்