Published:Updated:

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் இடையே மோதல்

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் இடையே மோதல்
கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் இடையே மோதல்

திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணத்தூரில் இருக்கிறது தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம். இந்த சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடப்பதாக இருந்தது.

##~~##
அ.தி.மு.க சார்பில் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ அரங்கநாயகத்தின் ஆதரவாளர் முருகனும், ஒன்றியச் செயலாளர் பாஷியத்தின் ஆதரவாளர் மோகனும் ஏற்கனவே மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இரு தரப்பும் எதிர் எதிர் அணியாக செயல்பட்டு வந்ததால் பதவியைப் பிடிப்பது யார் என்று கடும் போட்டி நிலவி வந்தது. ஒன்றியச் செயலாளர் பாஷியத்தின் செல்வாக்கு இறுதியில் ஓங்கியது.
இந்தநிலையில், இன்று காலை தேர்தல் தொடங்கியதும் எம்.எல்.ஏ‍.வின் ஆதரவாளர் முருகன் மற்றும் சில அ.தி.மு.க‍.வினர் வாக்குப் பதிவு மையம் வந்து வாக்குச் சீட்டுகளை கிழித்து வீசி தகராறு செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இறுதியில் காவல்துறையினர் லேசான தடி அடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். ஆளும் கட்சிக்குள் நடந்த மோதலால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதை அறிந்து, திருவண்ணாமலையில் உள்ள‌ மற்ற கட்சி தொண்டர்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனர்.
பா.கந்தக்குமார்