Published:Updated:

எப்படி இருக்கிறார் விஜயகாந்த்?

எப்படி இருக்கிறார் விஜயகாந்த்?
பிரீமியம் ஸ்டோரி
எப்படி இருக்கிறார் விஜயகாந்த்?

எப்படி இருக்கிறார் விஜயகாந்த்?

எப்படி இருக்கிறார் விஜயகாந்த்?

எப்படி இருக்கிறார் விஜயகாந்த்?

Published:Updated:
எப்படி இருக்கிறார் விஜயகாந்த்?
பிரீமியம் ஸ்டோரி
எப்படி இருக்கிறார் விஜயகாந்த்?

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை வழக்கம்போல, வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடினர்  அக்கட்சியின் தொண்டர்கள். ஆனால், அவரது உடல்நிலை வழக்கமான நிலையில் இல்லை என்பதை அந்தக் கட்சித் தொண்டர்கள் அறிவார்கள். 

எப்படி இருக்கிறார் விஜயகாந்த்?

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மரணச் செய்தி கேட்டு, விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுத வீடியோவை, ஒட்டுமொத்தத் தமிழ்நாடுமே நெகிழ்ச்சியுடன் பார்த்தது. அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பிய விஜயகாந்த், மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். பிரேமலதா ஒருபுறம், சுதீஷ் இன்னொருபுறம் விஜயகாந்தைக் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று அஞ்சலி செலுத்தும் வீடியோவைப் பார்த்தவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்த கேள்வி, ‘என்ன ஆச்சு விஜயகாந்தின் உடல்நிலைக்கு?’ என்பதுதான்.

ஆனால், அடுத்து வந்த ஓரிரு நாள்களில் மேடையில் தோன்றினார் விஜயகாந்த்.  தன் பிறந்தநாள் விழாவின்போது அவர் தொண்டர்களைச் சந்தித்ததும் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ஆனாலும் விஜயகாந்த், அதே பழைய உற்சாகத்துடனும் வெள்ளந்திச் சிரிப்புடனும் இயல்புநிலைக்குத் திரும்புவாரா என்ற கேள்வியும் தொண்டர்களிடம் இல்லாமலில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பலவித உடல்நலப் பிரச்னைகள் இருந்தாலும் மிகுந்த நம்பிக்கையோடு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டியே வந்தார் விஜயகாந்த். ஜெயலலிதா இறந்தபிறகு, ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதுதான் விஜயகாந்த் உடல்நிலையில் மேலும் நலிவு ஏற்பட்டது.

2017 மார்ச் 22-ம் தேதி போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‘இது ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான்’ என்று அறிக்கை வெளியானது. ஆனால் சிலநாள்களிலேயே, ‘மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார்’ என்ற தகவலும் வெளியானதால் விஜயகாந்த் உடல்நிலை குறித்த குழப்பம் நீடித்தது. 

 “பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கு விஜயகாந்த் குடும்பத்தினர் தொடர்ச்சியாக முயற்சி எடுத்துவருகின்றனர். ஆனாலும் அவரின் உடல்நிலையில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. வேகமாக நடக்க முடியாமலும் நீண்ட நேரம் தெளிவாகப் பேசமுடியாமலும் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாகவே கட்சிக்கூட்டங்களில் அவர் பேசுவதும் தவிர்க்கப்பட்டது.

தவிர்க்கமுடியாத சூழலில் அவர் பேச நேர்ந்தாலும், சில நிமிடங்கள் மட்டுமே பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவருக்குள்ள பிரச்னைகளில் முக்கியமானது கால்சியம் பற்றாக்குறை. அதனுடன் தைராய்டு பிரச்னையும் சேர்ந்துகொண்டது. இதனை ஹைப்போ பாரா தைராய்டு (HYPO para thyroid) என்கின்றனர். கால்சியம் பற்றாக்குறை ஏற்படும்போது, உடலில் நடுக்கம் உள்ளிட்ட சில குறைபாடுகள் ஏற்படும்” என்று விவரிக்கிறார்கள் விஜயகாந்தின் நட்பு வளையத்தில் இருப்பவர்கள்.

எப்படி இருக்கிறார் விஜயகாந்த்?

“ஆரம்பத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறைதான் விஜயகாந்த் சிகிச்சை எடுத்து வந்தார்.  பிறகு, அது வாரம் ஒருமுறை என்றாகிவிட்டது. மருத்துவமனையிலிருந்து வந்தவுடன், ஒருநாள் ஓய்வெடுப்பார். அதன்பிறகு கட்சி தொடர்பான விழாக்களில் மூன்று நாள்கள் கவனம் செலுத்துவார். அதன்பிறகு மீண்டும் ஓய்வெடுப்பார். இப்படி வாரத்துக்கு இரண்டு நாள்கள் ஓய்வு, இடையில் கட்சிப்பணி என இயங்கிவந்தார்.

 பிறகு வெளிநாட்டில் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  அமெரிக்கா செல்வதற்கு முந்தைய வாரங்களில், சென்னையில் உள்ள வீட்டில் வைத்து அவருக்குப் பேச்சுப் பயிற்சியும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 20-ம் தேதி அமெரிக்காவிலிருந்து வந்ததும், ‘கேப்டனைச் சந்திக்க வேண்டும்’ என நாங்கள் வேண்டுகோள் வைத்தோம். இதற்குப் பதில் அளித்த தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ‘இப்போது பார்த்தால் அவர் ரொம்பவும் எமோஷனலாகிவிடுவார். எனவே அவரைப் பார்க்க வேண்டாம். நாங்களே அழைக்கிறோம். அப்போது வாருங்கள்’ எனக் கூறிவிட்டார்” என்கிறார் தே.மு.தி.க நிர்வாகி ஒருவர்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், “மெரினாவில் அவர் நடந்து வந்த காட்சியைப் பார்த்ததும் எங்களுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவரை ஒரு ஹீரோவாகவும் அரசியல் தலைவராகவும் அருகில் இருந்து பார்த்திருக்கிறோம். திரையில் பார்த்த அதே கம்பீரத்தை நேரிலும் ரசித்தோம். அரசியலிலும் அவர் ஹீரோவாகத்தான் இருந்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா என்னும் இரண்டு அரசியல் ஆளுமைகளுக்கு எதிராகவும் கட்சி நடத்தியவர் அவர். ‘இரண்டு கட்சிகளுக்கும் மாற்று’ என்னும்போது மக்களின் தேர்வு அவராகவே இருந்தது. துணிச்சலுக்குப் பேர்போன ஜெயலலிதாவையே துணிச்சலாக எதிர்த்து நின்றவர் அவர். அலங்காரமான மேடைப்பேச்சுகள் இல்லாமல் இயல்பான பேச்சால் மக்களின் மனம் கவர்ந்தவர்.

ஆனால் பரபரப்பான அரசியல் செயல்பாடுகள் காரணமாக, அவர் தன் உடல்நிலையை சரியாகக் கவனிக்கவில்லை என்பதுதான் எங்களுக்கு இருக்கும் மனக்குறை. 2009-ம் ஆண்டிலேயே அவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர் ஒருவர், ‘சில பிரச்னைகள் பின்னாளில் சிக்கல் உண்டாக்கலாம். சிறப்புக் கவனம் செலுத்துங்கள்’ எனக் கூறினார். அதன்பிறகும் உடல்நிலையில் அவர் போதிய அக்கறையைச் செலுத்தவில்லை. ஆனால் எல்லாச் சவால்களையும் சந்தித்து அவர் மீள்வார் என்று நம்புகிறோம். துணிச்சலும் வெளிப்படைத்தன்மையும் உள்ள தலைவராக, பழைய கேப்டனாக அவரைப் பார்க்க விரும்புகிறோம்’’ என்றார் ஆதங்கத்தோடு.

கேரள வெள்ள பாதிப்புக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை அனுப்புவது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது என உற்சாகத்துடன் வலம் வருகிறார் விஜயகாந்த். கடந்த ஜூன் மாதம் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய சுதீஷ், ‘செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்சியின் ஆண்டுவிழாவில் ஒரு மணி நேரம் உரையாற்றுவார் கேப்டன்’ என்றார். அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் தே.மு.தி.க தொண்டர்கள்!

ஆ.விஜயானந்த்