Published:Updated:

காவல்துறை முதல்வருக்கு தவறான தகவல்களை அளித்துள்ளது: ராமதாஸ்

காவல்துறை முதல்வருக்கு தவறான தகவல்களை அளித்துள்ளது: ராமதாஸ்
காவல்துறை முதல்வருக்கு தவறான தகவல்களை அளித்துள்ளது: ராமதாஸ்
காவல்துறை முதல்வருக்கு தவறான தகவல்களை அளித்துள்ளது: ராமதாஸ்

விழுப்புரம்: மரக்காணம் கலவரம் தொடர்பாக காவல்துறை முதலமைச்சருக்கு தவறான தகவலை அளித்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"மரக்காணம் கலவரம் தொடர்பாக காவல்துறை முதலமைச்சருக்கு தவறான தகவல்களை அளித்துள்ளது. அவர் சட்டமன்றத்தில் வாசித்த அறிக்கை காவல்துறை எழுதிக் கொடுத்த அறிக்கைபோல் உள்ளது. இதனை அப்படியே முதல்வர் வாசித்துள்ளார். இதனால் 2 கோடி வன்னிய மக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளன. கட்டப்பஞ்சாயத்து, கலவரம் போன்றவற்றில் ஈடுபடும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பை கண்டித்துதான் இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்த இருந்தோம். அமைதியாக நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். போலீஸார் கைது செய்தால் அதற்கும் தயாராகத்தான் வந்துள்ளேன்.

##~~##
கடந்த 33 ஆண்டுகளாக பாமக சமூக நல்லணிக்கத்துக்காக பாடுபட்டு வருகிறது. வன்னியர்களும், தலித் மக்களும் சகோதர்களாக வாழ வேண்டும் என்று தான் பாமக விரும்புகிறது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படுகிறது.மரக்காணத்தில் நடந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஆயிரக்கணக்கில் வாகனங்கள் அணி வகுத்து வரும்போது சாலை மறியல் செய்து அதனை தடுக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் சாலை மறியல் செய்வர்களை அப்புறப்படுத்தி வாகனங்களுக்கு வழிவிட்டிருந்தால் அங்கு எந்த கலவரமும் நடைபெற்றிருக்காது. ஆனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை வந்த வழியே செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
மரக்காணம் பகுதி கலவரம் நடைபெறும் பகுதி என்று தெரிந்தும் அப்பகுதியில் போதிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. 2 அல்லது 3 நாள்களுக்கு முன்பே அதிக அளவு போலீஸாரை பாதுகாப்பு பணியில் அங்கு ஈடுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் இரண்டு, மூன்று போலீஸார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர்.
வாகனங்களை சாலை மறியல் மூலம் வழிமறிக்கும்போது, அங்கு என்ன நடக்கிறது என்பதை இறங்கி பார்த்தவர்கள் மீது தாக்குல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் இருவர் இறந்துள்ளனர். ஆனால் அவர்களின் உறவினர்களை மிரட்டி விபத்து என்று கூறி புகார் எழுதி கையெழுத்து வாங்கியுள்ளனர். இப்படுகொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மட்டுமே தாழ்த்தப்பட்டோருக்கான அமைப்பு கிடையாது. தாழ்த்தப்பட்டோருக்காக 35-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அவர்களை கட்டப்பஞ்சாயத்து செய்வது, 13 மற்றும் 14 வயது பெண்களை காதலிக்கச் சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டிவிடக் கூடாது.
தற்போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஒவ்வொரு கட்சித் தலைவரின் வீட்டுக் கதவை தட்டி சந்தித்து வருகிறார். அவர் கூறுவதை கேட்டு அப்படியே தலைவர்கள் அறிக்கை விடக் கூடாது. மரக்காணத்துக்கு வந்து உண்மை நிலையை தெரிந்து கொண்டு அறிக்கை கொடுக்க வேண்டும். எங்கள் மீது எந்த தவறும் இல்லை. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக எந்த அரசியல் கட்சித் தலைவரையும் சந்திக்கும் திட்டம் எங்களிடம் இல்லை. அதனால் நாங்கள் மரக்காணத்துக்கு நேரில் வந்து உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள் என்கிறோம்” என்றார்.