Published:Updated:

காடுவெட்டி குரு, புழல் சிறையில் அடைப்பு!

காடுவெட்டி குரு, புழல் சிறையில் அடைப்பு!
காடுவெட்டி குரு, புழல் சிறையில் அடைப்பு!
காடுவெட்டி குரு, புழல் சிறையில் அடைப்பு!

சென்னை: சாதி வெறியை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பா.ம.க. எம்.எல்.ஏ காடுவெட்டி குரு நேற்றிரவு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

விழுப்புரத்தில் போலீஸ் தடையை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். நேற்று மாலை 6.30 மணி அளவில் ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவும் திடீரென்று கைதானார்.

சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதி 8வது மாடியில் உள்ள டி பிளாக்கில், அறை எண் 8 இ-ல் காடுவெட்டி குரு தங்கி இருந்தார்.

மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் 2 போலீஸ் வேன்களில் எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்தனர். அறையில் இருந்த காடுவெட்டி குரு எம்.எல்.ஏ.வை கைது செய்தனர். உடனடியாக அவரை போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செங்கல்பட்டு கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வீட்டில் அவரது முன்னிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

##~~##
கடந்த 2012ஆம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் போலீசார் காடுவெட்டி குரு மீது, பொதுக்கூட்டத்தில் சாதி வெறியை தூண்டும் வகையில் பேசியதாக ஒரு வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட வாரண்டு அடிப்படையில் காடுவெட்டி குரு இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதே போல முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகமும் மறைமலைநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.