ஆளும்கட்சி சார்பில் நடத்தப்படும் ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழில் வெளியாகியுள்ள ‘மாஃபியா தடை... மர்மத்தை உடை...’ என்ற கவிதை, அரசியல் வட்டாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு. ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான எய்ம்ஸ் டாக்டர்கள், ‘அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை. சிகிச்சையை மேற்பார்வையிடவே வந்தோம்’ என்று சொன்னதாக வெளியான செய்தியைக் குறிப்பிட்டு, ‘எழுபத்தைந்து நாளா என்னதான் செஞ்சாங்க... ஆக்டோபஸ் கும்பல் அரணமைச்சு நின்னுச்சு... அம்மாவை அமைச்சர்கள் பார்க்கவும் அனுமதிக்க மறுத்துச்சு. அயல்நாடு கொண்டுசென்று மேல்சிகிச்சை செய்ய லாமான்னு ஓர் ஆலோசனைக் கூட்டம்கூட நடத்தலை’ என்கிறது அந்தக் கவிதை.

‘அடுத்து லண்டன் டாக்டரை வரவழைத்துக் கிண்டினால், அவரும் அப்போலோ மருத்துவமனையைச் சுற்றிப் பார்க்க வந்தேன் என்று சொல்லலாம். அப்போலோ மருத்துவர்களாவது அம்மாவுக்குச் சிகிச்சை தந்தார்களா என்பது தெய்வத்துக்கே வெளிச்சம். அண்ணா அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். எம்.ஜி.ஆருக்கும் அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. கண்ணதாசன்கூட அமெரிக்கா போனார். எங்கள் அம்மா செஞ்ச பாவம் என்ன? மாஃபியா கும்பலே விடை சொல்... மர்மங்களுக்குப் பதில் சொல்!’ என்று நீள்கிறது அந்தக் கவிதை.

ஆனால், ‘‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த அனைத்து சந்தேகங்களுக்கும் முடிவுரையாக அமைந்துவிட்டது எய்ம்ஸ் மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை’’ என்று தெம்பாகச் சொல்கிறார், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன். ஓர் ஆண்டை நெருங்கிவிட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், நீண்ட நாள்களாக இழுபறியாகி வந்த எய்ம்ஸ் மருத்துவர்களின் வாக்குமூலமும் நிறைவடைந்துவிட்டது.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உடல்நிலை ஒரு கட்டத்தில் அபாயநிலையை அடைந்தது. அப்போது தமிழக அரசு, மத்திய அரசிடம் மருத்துவர்களின் உதவியைக் கோரியது. மத்தியச் சுகாதாரத் துறை அமைச்சகம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து மூன்று நிபுணர்களை அனுப்பியது. இதய நிபுணர் பேராசிரியர் நிதிஷ் நாயக், நுரையீரல் நிபுணர் ஜி.சி.கில்னானி, மயக்கவியல் நிபுணர் பேராசிரியர் அஞ்சன் த்ரிக்கா ஆகியோரே அவர்கள். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 2016 செப்டம்பர் 22 தொடங்கி, அவர் மறைந்த டிசம்பர் 5 வரை ஒன்பது முறை இவர்கள் ஜெயலலிதாவைப் பார்த்தனர். அப்போலோ மருத்துவர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை அவ்வப்போது இவர்கள் வழங்கிவந்தனர்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் இந்த மூன்று மருத்துவர்களும் ஆஜராக வேண்டும் என ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 23-ம் தேதி மூவரும் ஆஜராகி ஏழு மணி நேரம் சாட்சியம் அளித்தனர். அப்போது அவர்களிடம், ஜெயலலிதா மரணம் தொடர்பாகவும், பொதுவான மருத்துவ நடைமுறைகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் எழுப்பினர். ‘‘மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனை வழங்கவே வந்திருந்தோம். நாங்கள் வருவதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஆவணங்கள் மூலம் அறிந்துகொண்டோம். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து, தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு முன்னேற்றம் அடைந்துள்ளது. அதன்பிறகு, செப்டம்பர் 27-ம் தேதி மீண்டும் கவலைக்கிடமானது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மூத்த அமைச்சர்களிடம் சொல்லிவந்தோம்’’ என்று அவர்கள் வாக்குமூலம் அளித்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக மறுதினமே, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இவர்களிடம் குறுக்கு விசாரணை செய்தார். ‘‘ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மூத்த அமைச்சர்களிடம் விவரித்ததாகச் சொன்னீர்களே, மூத்த அமைச்சர் என்றால் அது எடப்பாடி பழனிசாமியா?’’ என்று கில்னானியிடம் வழக்கறிஞர் கேட்டபோது, ‘‘இல்லை. பன்னீர்செல்வத்திடம் விவரித்தோம்’’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அவர். அதேபோல், ‘‘அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் அறையிலும், சில நேரம் அதற்குப் பக்கத்து அறையிலும் வைத்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விளக்கிவந்தோம்’’ என்றும் கில்னானி சொல்லியிருக்கிறார்.

மேலும், ‘‘ஜெ-வுக்கு செப்டம்பர் 27-ம் தேதி முதல் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. நாங்கள் 5.10.16 அன்று அப்போலோவுக்கு வந்து அவரது உடல்நிலையைப் பார்த்துவிட்டு, வென்டிலேட்டரை அகற்றச் சொன்னோம். அதற்குப் பதிலாக, ட்ரக்கியோஸ்டமி கருவியைப் பொருத்தச் சொன்னோம். 5.10.16 முதல் 15.10.16 வரையிலான 11 நாள்களில் எட்டு நாள்கள் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடி மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவந்தோம்’’ என்றார் கில்னானி. எய்ம்ஸ் மருத்துவர்களில் ஒருவரான நிதிஷ் நாயக், ஜெயலலிதாவுக்கு ட்ரக்கியோஸ்டமி பொருத்துவதற்கு முன்பாக, அவரது இதயத்துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் தானே பரிசோதனை செய்ததாகக் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு இருந்த இதயப் பிரச்னைகளுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக, ஜான் ஹாப்கின்ஸ் இன்ஸ்டிட்யூட் என்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணரான டாக்டர் ரஸ்ஸலுடன் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மருத்துவ ஆலோசனை நடைபெற்றுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்போலோவில் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களும் அந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்கள்.

ஜெயலலிதா 20 நிமிடங்கள்வரை படுக்கையில் உட்காரும் நிலையிலும் இருந்துள்ளார். அவர் 24 மணி நேரமும் செயற்கை சுவாசத்தில் இல்லை எனவும், இரவு நேரத்தில் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, செயற்கை சுவாசக்குழாய் பொருத்தப்பட்டது என்பதையும் அவர்கள் சாட்சியத்தில் பதிவு செய்துள்ளார்கள். இறுதியாக, எய்ம்ஸ் மருத்துவர்கள் 2016 டிசம்பர் 3-ம் தேதி ஜெயலலிதாவைப் பார்த்துள்ளனர். ‘‘அப்போது அவர் உடல்நிலை நன்றாக இருந்தது. அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது’’ என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

இந்நிலையில், ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக சசிகலா தரப்பில் ஏற்கெனவே குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. அதற்கு சில காரணங்களையும் அவர்கள் சொல்கிறார்கள். ஜெ. உதவியாளரான பூங்குன்றனிடம், ‘‘கார்டனில் நடைபெறும் விஷயங்கள் பற்றி ஆடிட்டர் ஒருவர் மூலம் சுப்பிரமணியன் சுவாமிக்கு தகவல்கள் சென்றது உண்மையா?’’ என்று சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் எழுப்பியுள்ளனர். அதேபோல், ‘‘முதல்வரின் துறை பற்றி கருணாநிதி குற்றம்சாட்டி அறிக்கை கொடுத்ததால்தான் பன்னீருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டதா?’’ என்ற கேள்வியை அரசுத் துறை செயலாளர் ஒருவரிடம் கேட்டுள்ளனர். ‘‘இவையெல்லாம் பன்னீர்செல்வத்தைக் காப்பாற்றும் முயற்சி’’ என்ற குரல் சசிகலா தரப்பில் எழுந்துள்ளது.

‘‘நாங்கள் மூன்று மணி நேரம் நடத்திய குறுக்கு விசாரணையில் ஜெயலலிதா மரணம் பற்றிய பல சந்தேகங்களைத் தெளிவுபடுத்தினோம். பன்னீர்செல்வத்துக்கு சிகிச்சை தொடர்பான அனைத்து விஷயங்களும் தெரியும் என்பதை எய்ம்ஸ் மருத்துவர்களே ஒப்புக்கொண்டனர்’’ என்கிறார் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்.

இப்போது ஆணையத்தின் விசாரணை வளையத்தில் சுப்பிரமணியன் சுவாமியைச் சிக்கவைக்கும் முயற்சியும் நடக்கிறது.

ஆணையத்தின் ஆயுள்காலம் முடிந்தாலும், ஆணையத்தின்மீதான சர்ச்சைகள் முடியாது போல!

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: வெ.நரேஷ்குமார்