நோபல் விஞ்ஞானிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு லேட்டஸ்ட் சென்சேஷன் ஆகியிருக்கிறார், திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ். பி.ஜே.பி-யைச் சேர்ந்த இவரின் அதிரடி பேச்சுகள், அநேக சயின்டிஸ்ட்டுகளின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. 2030-ம் ஆண்டில் பிப்லப் தேவ் என்னவெல்லாம் பேசுவார்? இதோ சில ஐடியாக்கள்:

அகர்தலா, ஜன.33
சங்க காலத்தில் நம் முன்னோர்கள் ஒருவரோடு மற்றவர்கள் தொடர்புகொள்ள மின்னலைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார் திரிபுரா முதல்வரான பிப்லப் குமார் தேவ். கம்பிகள் இல்லாத அந்தக் காலத்தில், மின்னலை ஆன்டெனாவாகப் பயன்படுத்தி வைஃபை உபயோகித்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி, பிப். 30
அரசு வேலைகளைத் தகுதியற்றவர்கள் எளிதாகப் பெறுவதாக எழுந்த புகாரையடுத்து, இனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே ஐ.ஏ.எஸ் செலக்ஷன் தேர்வுகளை எழுதவேண்டுமென்றும், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமே ஐ.பி.எஸ் செலக்ஷன் தேர்வுகளை எழுதவேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிப்லப் குமார் தேவ்.

வாரணாசி, ஏப்.1
இரவும் பகலும் மாறி மாறி வருவதற்குக் காரணம் யானைகளின் இடம்பெயர்தலே என்ற உண்மையை நிரூபித்துள்ளார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிப்லப் குமார் தேவ். யானைகள் கூட்டமாக நடப்பதால், அந்த வெயிட்டின் அழுத்தம் தாங்காமல் பூமி சுற்றுவதாகவும் அதன் காரணமாகவே இரவு பகல் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத், ஆக.40
தீவிரமாகப் பரவிவரும் பறவைக் காய்ச்சலைத் தடுக்க ஒரு உபாயம் கண்டறிந்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் பிப்லப் குமார் தேவ். நோய்த் தடுப்பு கட்டமைப்பு போதுமான அளவு இல்லாத காரணத்தால், மொத்தமாக எல்லாப் பறவையினங்களையும் சுட்டுக் கொன்றுவிட்டால் நோய் வராது என்பது அவரின் ஐடியா. இதற்கு அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்துவிட்டது.

பெங்களூரு, டிச. 31 நள்ளிரவு 11.58
‘பெருகிவரும் உணவுத்தேவையை சமாளிக்க இனி ஆடு, மாடு மேய்ச்சல் சரிப்படாது. எனவே, வீட்டுக்கு ஒரு டிரெக்ஸ் டைனோசர் குட்டி வழங்கப்படும். டைனோசர் பாலை கூட்டுறவு சங்கங்களில் கொடுத்துவிட வேண்டும். ஆடு, மாடுகளை வேளாண் தேவைக்குப் பயன்படுத்துவது நள்ளிரவிலிருந்து தடை செய்யப்படுகிறது’ என அறிவித்துள்ளார் வேளாண்துறை அமைச்சர் பிப்லப் குமார் தேவ்.