Published:Updated:

விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அன்புமணி கேள்வி

விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அன்புமணி கேள்வி
விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அன்புமணி கேள்வி
விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறிய அன்புமணி, மரக்காணம் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மாமல்லபுரத்தில் பா.ம.க. சார்பில் நடந்த சித்திரை முழு நிலவு விழாவுக்கு வந்தவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். இரு சமூகத்தினர் இடையே நடந்த மோதல் காரணமாக தலித் மக்கள் வீடுகள் எரி்க்கப்பட்டது. மாமல்லபுரம் கூட்டத்தில் சாதி மோதல்களை தூண்டும் வகையில் பா.ம.க தலைவர்கள் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்தநிலையில், மரக்காணம் கலவரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தி்ல் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் ஜெ.குரு, ஜி.கே.மணி, திருக்கச்சூர் ஆறுமுகம் உள்பட அக்கட்சி தொண்டர்கள் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி, ‘‘கைது நடவடிக்கை அடிப்படை உரிமைகளை மீறும் செயல். போலீசின் அத்துமீறல்களை மறைக்கவே கைது செய்கிறார்கள். இதை சட்டப்படி சந்திப்போம். மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்த இருவர் மறைவுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தந்து விட்டு ரத்து செய்துவிட்டனர்’’ என்றார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறிய அன்புமணி ராமதாஸ், மரக்காணம் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

##~~##
மரக்காணத்தில் கடந்த 25ஆம் தேதியன்று இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை வைத்தார்.