சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

தலைவர்களுக்குக் கட்டும் சமாதிக்கு ஆரம்பத்தில் வரும் கூட்டம், போகப்போகக் குறைந்து விடுகிறதே?

ஒரு வீட்டில் பெரிய தலை விழுந்துவிட்டால், ஓரிரு நாட்களுக்கு அழுகை கேட்கும். ஓரிரு வாரங்களுக்குத் துக்க விசாரணை நடக்கும். ஓரிரு மாதங்கள் துக்கம் தொண்டையை அடைக்கும். ஒரு கட்டத்தில் எல்லாமே மாறி, சகஜநிலைக்கு வந்துவிடுவார்கள். பிறகு எல்லாமே மறந்துவிடும். தொண்டனாக இருந்தாலும், தலைவனாக இருந்தாலும் இதுதான் எதார்த்தம். இன்று இருப்பவர் என்றும் இருப்பதில்லை. இருப்பவர்கள் அதை நினைப்பது இல்லை.

பொன்.மூர்த்தி, விழுப்புரம்.

எவ்விதத் திட்ட அறிக்கையுமின்றி, ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள், 325 கோடி ரூபாயில் முக்கொம்பில் புதிய அணை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவிழ்த்துவிடுவது சரியானதா?

என்னவோ திட்டமிருக்கு!

@ஆர்.முத்துவேல், அபுதாபி.

‘இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்ட வா, முதுகெலும்பில்லாத தமிழக அரசைத் தூக்கி எறிய வா’ என்று ஸ்டாலின் அறைகூவல் விடுத்திருப்பதைக் கவனித்தீரா?

ஏற்கெனவே, 1999 முதல் 2004 வரை காவி வண்ணம் அடித்தபோது, கூடவே பெயின்ட் டப்பா தூக்கிக்கொண்டிருந்த கட்சிக்கு, தலைமை மாறியிருக்கிறது. அதனால், இப்போது புதுக்குரல் கேட்கிறது. போகப்போகத் தெரியும்.

@நரசிம்மன் கே.வி.

‘‘திருநாவுக்கரசர் மறுபடியும் பி.ஜே.பி-யில் சேர்ந்துவிடலாம்’’ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியிருப்பது சரியா?

இப்படி இரண்டு பேர் மோதிக் கொண்டால்தானே, தமிழகத்தில் காங்கிரஸ் என்றொரு கட்சி இருக்கிறது என்பதே உங்களைப் போன்றவர்களுக்குத் தெரிகிறது. இதில்கூடக் குற்றம் கண்டுபிடிக்கிறீர்களே! ரசித்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

பி.சூடாமணி, ஸ்ரீரங்கம்.

‘முல்லைப் பெரியாறு அணையைத் திடீரெனத் திறந்துவிட்டதுதான் கேரளாவில் பெருவெள்ளப் பாதிப்புக்குக் காரணம்’ என்று கேரள கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சித் தலைவர்கள் கூறுகிறார்களே?

முல்லைப் பெரியாறு அணை என்பது அருகிலிருக்கும் இடுக்கி அணையைவிட மிகக்குறைவான தண்ணீரைத் தேக்கிவைக்கும் அணையாகும். அதிலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க முடியாது என்பதில் கடைசிவரை தமிழகம் உறுதியாக நின்றது. அப்படியிருக்க, இந்த அணையைத் திறந்ததுதான் பெருவெள்ளத்துக்குக் காரணம் என்று சொல்வது கடைந்தெடுத்த பொய். இதை விட்டுத்தள்ளுவோம். ‘கேரளாவில் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட அணைகளை முன்அறிவிப்பின்றி ஒரே நேரத்தில் திறந்துவிட்டதுதான் பேரழிவுக்குக் காரணம்‘ என்று கேரள மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. முதலில் அதற்கு நேர்மையான பதிலைச் சொல்லட்டும் அந்த கம்யூனிஸ்ட்கள். தமிழக மக்களின் தோழமையை மனத்தில் நிறுத்தினால், இவ்வாறு அரசியல் பேசமாட்டார்கள்.

@பார்த்தசாரதி.

‘‘டாஸ்மாக் வருமானத்தில்தான், அரசு பள்ளிக்கூடங்களைக் கட்டுகிறோம். ஆசிரியர்களுக்குச் சம்பளம் தருகிறோம்’’ என்று அமைச்சர் வீரமணி பேசியுள்ளாரே?

மக்களிடம் பிக்பாக்கெட் அடித்துப் பங்கு போட்டுக்கொள்ளும் கும்பல், தெருவில் விளையாடும் குழந்தைகளுக்கு அந்தப் பணத்தில் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதைப் பெருமையுடன் ஃப்ளெக்ஸ் அடித்து ஊர் முழுக்க வைத்தால், நானும் நீங்களும் அதை என்ன செய்ய முடியும்!

ஆர்.மீனாட்சி, சென்னை-62.

அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகுவது பற்றி?

டெல்லியில் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் ருசியை அனைவரும் நன்றாகவே அறிந்திருப் பார்கள். மெள்ள மெள்ளச் சராசரி அரசியல் கட்சியாக ஆம் ஆத்மி மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்!

@ஸ்டீபன்ராஜ்.

மு.க.ஸ்டாலின், அரசியலில் சசிகலாவை சமாளிப்பாரா?

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களே சமாளிக்கிறார்களே!

சீ.எழில்பாபு, வானமாதேவி.

‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உடலில், ஜெயலலிதா ஆன்மா நுழைந்துள்ளது. அதனால், அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்’ என்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கோமாளித்தனமாகப் பேசியிருக்கிறாரே?

கோமாளிகள் புத்திசாலித்தனமானவர்கள். அவர்கள், ஏதாவதொரு உண்மையை உள்ளுக்குள் வைத்தேதான் எப்போதுமே பேசுவார்கள்.

மு.கனகராஜ். புஞ்சைபுளியம்பட்டி.

தமிழகத்தில் தனி மனிதர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி ஜனநாயகம் உயிர்பெறுமா?

ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களை மனதில் வைத்துத்தானே கேட்கிறீர்கள். தனிமனித ஆதிக்கம் என்பது மிகமிக ஆபத்தானது. மக்களாட்சி என்று சொல்லிக்கொண்டாலும், தனிமனித ஆதிக்கம் கொண்டவர்கள் ஆட்சியில் அமரும்போது, தங்களை ராஜா, ராணி போலப் பாவித்துக் கொண்டு, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் ஆட்டிப்படைக்கிறார்கள். தங்கள் இஷ்டம்போல திட்டங்களைத் தீட்டுவதும், எதை வேண்டுமானாலும் மாற்றுவதுமாக ஆட்டம் போடுகிறார்கள். தமிழகத்தில் இனி அதற்கு வாய்ப்பிருக்கிறதா இல்லையா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால், யார் பதவிக்கு வந்தாலும் அவர்களை ‘நிரந்தர முதல்வரே’ என அழைத்து, சர்வாதிகாரியாக மாற்றிவிடும் ஒரு கும்பல் எல்லாத் தலைவர்களின் அருகிலும் இருக்கிறது. அவர்கள்தான் இந்தத் தலைவர்களை ஆபத்தானவர்களாக மாற்றுகிறார்கள்.

ஒய்.எஸ்.ராமர், சிவகங்கை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, 10,720 கோடி ரூபாய் மட்டும்தான் வங்கிகளுக்குத் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதே!

வடை போச்சே மொமன்ட்தான்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, கறுப்புப் பணம் அனைத்தும் ஒழிந்துவிடும். வங்கியில் யாரும் அந்தப் பணத்தைக் கொண்டுவந்து போடமாட்டார்கள் என்றுதான் எதிர்பார்த்தது மத்திய அரசு. ஆனால், கிட்டத்தட்ட 99 சதவிகிதப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. பிறகு, அதில் ஒரு பகுதி வெளியிலும் போய்விட்டதாகத் தெரிகிறது. மத்திய அரசு எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. இது ஒரு பின்னடைவே. அதேசமயம், ‘‘99 சதவிகிதப் பணமும் கணக்கில் காட்டப்பட்டு விட்டது. இனி, அதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. இப்படி பணத்தை வங்கியில் போட்டவர்களில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தவர்களைக் கண்டறியும் வேலைகள் நடக்கின்றன. யாரும் தப்ப முடியாது’’ என்று சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. ஆனால், இது எளிதான வேலையல்ல. கறுப்புப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்களைக் கண்டறிந்து வரி, அபராதம் வசூலிப்பதுடன், தண்டனையும் கொடுக்கப்படும் நாளில்தான், இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் முழுமையாக நிறைவேறியது என்று கூறமுடியும். ஆனால் ஒரு பயன் - வருமானவரி கட்டுவோர் அதிகரித்து உள்ளார்கள்.

சம்பத்குமாரி, பொன்மலை.

பஜனை கோஷ்டியுடன் கருணாநிதி சமாதிக்குச் சென்று வழிபாடு நடத்தியிருக்கிறாரே முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு?

கோயில் கோயிலாக யாகம் செய்துகொண்டிருந்த ஜெயலலிதா, தன்னைத் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டார். அந்தப் பரிணாம வளர்ச்சியை, கருணாநிதி சமாதி வரை நீட்டித்துள்ளனர் தி.மு.க-வினர். இதைத் தவிரச் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

தமிழகத்தில் தி.மு.க-வுடன் பி.ஜே.பி கூட்டணி அமைத்தால், மக்கள் வெற்றியைத் தருவார்களா?

இப்படி ஒரு கூட்டணி இருக்காது என்பதைப் பொதுக்குழுவிலேயே ஸ்டாலின் சுற்றிவளைத்துச் சொல்லிவிட்டாரே!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘‘ஜெயலலிதா மறைந்தபோது பி.ஜே.பி சில உதவிகள் செய்தது. அதற்காக நாங்கள் யாருக்கும் அடிமையாக இருக்க முடியாது’’ என்று தன்னுடைய பேச்சில் தைரியம் காட்டியிருக்கிறாரே எடப்பாடி பழனிசாமி?

இதைச் சொல்வதற்கும் அனுமதி வாங்கியிருப்பாரோ.

படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு, ம.அரவிந்த்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!