வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தல் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், எப்போது வருமோ என்று தெரியாத சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, தங்கள் பலத்தைக் காட்டும்விதத்தில் பல லட்சங்களைக் கொட்டி குடும்ப விழாக்களை நடத்துகிறார்கள் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க-வினர்.

செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான தனபால் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர், குடும்ப விழாக்களை நடத்தி அதகளப்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்.

“1991-96-ல், செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த தனபால், இப்போது அ.தி.மு.க-வின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக இருக்கிறார். இவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் செய்யூர் தொகுதியைக் கைப்பற்ற நினைக்கிறார். அதனால், செய்யூர் தொகுதியில் உள்ள சதுரங்கப்பட்டினத்தில் வீடு கட்டியிருக்கிறார். அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டு, அவற்றை மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுகிறார். ஊரில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்கிறார். தன் அரசியல் பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, 11 வயதாகும் தன் வளர்ப்பு மகனுக்கு பல லட்சங்கள் செலவு செய்து மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் ஃபோர் பாய்ன்ட் என்ற நட்சத்திர விடுதியில் சமீபத்தில் காதணி விழாவை பிரமாண்டமாக நடத்தினார். அதற்காக, கிழக்குக் கடற்கரை சாலை முழுக்க வைக்கப்பட்டிருந்த பேனர்களால், ஏரியாவே அதகளப்பட்டது. முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் பன்னீர் தலைமையில் இந்த விழா நடைபெறுவதாக இருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்ததால், அவர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.

இதேபோல, காஞ்சிபுரம் எம்.பி-யான மரகதம் குமரவேலும், குடும்ப விருந்து அரசியலுக்குத் திட்டமிட்டுள்ளார். இவர் எம்.பி-யாகி தொகுதிக்கு பெரிய திட்டங்கள் எதையும் அவர் கொண்டுவரவில்லை. தொகுதி முழுக்கவே அதிருப்தி அலை வீசுகிறது. இந்த நிலையில், மரகதத்தின் கணவர் குமரவேல், செய்யூர் அல்லது மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றக் கணக்கு போட்டு வருகிறார். எனவே, தனபால் நடத்திய காதணி விழாவை மிஞ்சும் அளவிற்கு, பிரமாண்டம் காட்ட நினைக்கிறார் குமரவேல். அதே நட்சத்திர விடுதியில் தங்கள் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவை செப்டம்பர் 6-ம் தேதி நடத்தவுள்ளனர் மரகதமும் குமரவேலுவும். முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் நடக்க இருக்கும் இந்த பிரமாண்ட விழாவுக்காக, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க புள்ளிகளுக்கு அழைப்பிதழை அளிக்கிறார்கள்.

மரகதத்தின் கணவர் குமரவேலிடம் பேசினோம், “எங்கள் ஒரே வாரிசு எங்கள் மகள்தான். முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, மகளுக்குப் பூப்புனித நீராட்டுவிழாவை நடத்த முடியவில்லை. உறவினர்கள் வற்புறுத்தியதால்தான் இப்போது விழா எடுக்கிறோம். அரசியலில் பலத்தை கட்டுவதற்காக அல்ல” என்றார்.

பூஞ்சேரியில் இருக்கும் கான்ஃப்ளூயன்ஸ் நட்சத்திர விடுதியில்தான், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியின் மகள் திருமணம் நடந்தது. இந்த மஹாலின் ஒருநாள் வாடகை ரூ.25 லட்சமாம்.

- பா.ஜெயவேல்