முதலில் புது இந்தியாவுக்குப் பெயர் வைத்தார்கள். அதன்பின் அதன் குடிமக்களுக்கு ரகம்வாரியாகப் பெயர் வைத்தார்கள். அதில் லேட்டஸ்ட் பெயர், ‘நகர்ப்புற நக்ஸல்கள்’. கவிஞர்கள், சமூக ஆர்வலர்களுக்கெல்லாம் இந்தப் பெயர் கொடுத்து அழகு பார்க்கிறார்களாம். இதுபோன்ற அழகான பெயர்கள் நிறைய இருக்கின்றன. அந்தப் பெயர்கள் பற்றியும், அவை யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதையும் பார்த்துவிடுவோம்.

வலைப்புற ராஜாக்கள்

ஒரு பிரச்னையும் இல்லாமல் நாடு சுபிட்சமாக இருக்கும். ‘அதெப்படி கம்முனு இருக்கலாம்?’ என எதையாவது சமூக வலைதளங்களில் கொளுத்திப்போடுவார்கள். உடனே, கபகபவென பிரச்னை பற்றியெறியும். இவர்கள் கூலாக தலைமறைவாகிவிடுவார்கள். எல்லாப் பிரச்னைகளும் முடிந்து இயல்புநிலைக்கு நாடு திரும்பும்போது, மறுபடியும் எதையாவது சொல்வார்கள். கவனம் மக்களே!

கிராமப்புற காமெடியன்கள்

தலைபோகிற பிரச்னைகள் அவ்வளவு இருக்கும். ஆனால், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் குளத்தில் கப்பல் விடுவது, அணையில் ஏரோப்ளேன் விடுவது போன்ற காமெடிகளில் ஈடுபடுவார்கள். இதுபோதாதென மைக்கைப் பார்க்கும்போதெல்லாம் உளறிக்கொட்டுவார்கள். இவர்களால் நடக்கும் ஒரே நல்ல விஷயம், நன்றாக டைம்பாஸ் ஆகும் என்பதுதான்.

வாட்ஸ்அப் பக்தர்கள்

சிறந்த பறவையாக டிஸ்கவரி சேனலால் இந்திய தேசியப் பறவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று தொடங்கி, மோடி ஒவ்வொரு நாட்டுக்கும் போய்த்திரும்பும்போது, அந்நாட்டில் இருந்த இந்தியக் கறுப்புப் பணத்தை ஃப்ளைட்டில் அள்ளிப்போட்டுக்கொண்டு வருகிறார் வரை, அபத்த ஃபார்வேர்டுகளால் அசரடிப்பார்கள். ஐ.க்யூ-வில் ஐன்ஸ்டீனே பிச்சைதான் வாங்கவேண்டும் போல.

ஃபாரீன் ரிட்டர்ன் தேசாபிமானிகள்

ஃபாரீன் எல்லாம் போய்ப் படித்திருப்பார்கள். ஆனால், வாயைத் திறந்தால் பொறுக்கி, தேசத்துரோகிகள் போன்ற வார்த்தைகள் அருவிபோல கொட்டும். எதையாவது தூக்கி யார் மீதாவது எறிந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இவர்களுக்குத் தூக்கமே வராது. ‘என்னை யாரும் கண்டுக்கமாட்றாங்க’ எனப் புலம்பித் தவிப்பார்கள்.

அப்பாவி பிரஜைகள்

எதையாவது செய்வார்கள். அது சம்பந்தமே இல்லாதவர்களை பாதிக்கும். ‘ஏங்க இப்படி?’ என்றால் உடனே பெயர் வைத்துவிடுவார்கள். இப்படி தினமொரு பெயரை வாங்கிக்கொண்டு, ‘சரி, அடுத்தென்ன? புதுசா சொல்லுங்க’ என்று கடந்து செல்லும் நாம் அனைவரும்தான் இது.