Published:Updated:

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்போம்: டாக்டர் தமிழிசை நம்பிக்கை

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்போம்: டாக்டர் தமிழிசை நம்பிக்கை
கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்போம்: டாக்டர் தமிழிசை நம்பிக்கை

சென்னை: "கர்நாடகாவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்" என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
 

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்போம்: டாக்டர் தமிழிசை நம்பிக்கை

கர்நாடக சட்டமன்றத்துக்கான வரும் 5ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. ஆளும்கட்சிக்கு ஆதரவாக எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆதரவு திரட்டினர்.  தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இறுதிகட்ட பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

தமிழக பா.ஜ.க.வை சேர்ந்த தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கர்நாடகாவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் கடந்த 8 நாட்களாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த பிரசாரம் குறித்து, நமது விகடன் டாட்காம் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி:

காங்கிரஸ் கட்சி, தமிழர் விரோத கட்சி. இலங்கை தமிழர்களையும் காப்பாற்ற வில்லை. தமிழக மீனவர்களையும் காப்பாற்ற வில்லை. இவர்களை கொல்லும் சிங்கள இராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வேடிக்கை பார்க்கிறது. வயிற்று பிழைப்புக்கு எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்கிறது. அவர்களை தட்டிக் கேட்க வழியில்லை.

இப்போது, நமது நாட்டுக்குள் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளே வந்து கூடாரம் அடித்துள்ள சீனா ராணுவத்தையும் தட்டிக்கேட்க மத்திய காங்கிரஸ் அரசுக்கு திராணி இல்லை.

சீனா காலூன்றி விடும் என்று சொல்லியே இலங்கை தமிழர்களை காவு கொடுத்து விட்டது. அதே சீனா இப்போது இந்தியாவுக்குள்ளேயே கால் பதித்து விட்டதே? என்ன செய்யப்போகிறீர்கள்?. காங்கிரஸ் கட்சி, மக்கள் விரோத ஆட்சியை மத்தியில் செய்கிறது. அவர்களை கர்நாடகாவில் காலூன்ற விடமாட்டோம். விரட்டி அடிக்க கர்நாடக தமிழர்கள் உறுதி பூண்டுள்ளனர். அதற்கான பிரசாரத்தை கடந்த 8 நாட்களாக செய்து வருகிறேன்.

##~~##
பெங்ளூரில் ஒரு நிருபர் என்னிடம் பேட்டி எடுத்தபோது, ‘‘குண்டு வைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?’’ என்று கேள்வி கேட்டார். அதற்கு நான், குண்டு வைத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தொண்டு செய்து ஓட்டுவாங்குவோம் என்று கூறினேன். இந்த வார்த்தைக்கு கர்நாடக பா.ஜ.க.வில் பலத்த வரவேற்பு இருந்தது. தமிழர்கள், உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இப்போது, 110 இடங்களுடன் இருக்கிறோம். இந்த தேர்தலில் மெஜாரிட்டிக்கு தேவையான 113 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம். ஊழல் செய்த எடியூரப்பாவை வீட்டுக்கு அனுப்பி விட்டோம். ஊழல் களையெடுக்கப்பட்டு விட்டது. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்தோம். நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் ஆட்சி அமைப்போம். தமிழர் பகுதியில் அளித்த உற்சாக வரவேற்பு என்னை நெகிழ வைத்தது.
இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.
எஸ்.முத்துகிருஷ்ணன்