‘அழகிரியின் ஆதரவாளர்கள்தான் அழகிரி பக்கம் உள்ளனர்; தி.மு.க-வின் தொண்டர்கள் தி.மு.க பக்கம்தான் உள்ளனர்’ என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது அழகிரி நடத்திய அமைதிப் பேரணி!

‘தி.மு.க-விலிருந்து நிரந்தரமாக அழகிரியை நீக்குகிறேன்’ என்ற முடிவை எடுத்தவர் கருணாநிதி. அவர் மரணம் அடைந்து... அடக்கம் செய்யப்பட்ட சமாதியின் ஈரம் காய்வதற்குள், “என்னைக் கட்சியில் சேர்க்க வேண்டும்” என்று பிரச்னையை ஆரம்பித்தார் அழகிரி. ஆகஸ்ட் 13-ம் தேதி கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தவந்த அழகிரி, “ஸ்டாலின் என்னைக் கட்சியில் சேர்க்க மறுக்கிறார்; உண்மைத் தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’’ என்றார். ‘‘செப்டம்பர் 5-ம் தேதி அமைதிப் பேரணி நடத்தப் போகிறேன்” என யுத்தத்துக்கு முன்னோட்டம் நடத்த தேதியும் குறித்தார். ‘‘அமைதிப் பேரணிக்கு 50,000 பேர் வருவார்கள்” என போலீஸ் அனுமதி வாங்கினார். மதுரையில் 10 நாட்கள் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியபிறகு, 50 ஆயிரத்தை ஒரு லட்சம் பேராக உயர்த்தினார். அ.தி.மு.க-வை எதிர்த்து ஊருக்கு ஊர் கூட்டம் சேர்த்துவரும் டி.டி.வி.தினகரனுடன் அழகிரியைப் பலரும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தனர்.

அதேசமயம், அழகிரியின் பேரணியை அவரின் ஆதரவாளர்களைவிட ஆளும் அ.தி.மு.க-தான் உற்சாகமாக எதிர்பார்த்துக் காத்திருந்தது. பேரணிக்கு அரசுத் தரப்பில் முழு ஒத்துழைப்புக் தரப்பட்டது. போலீஸ் அனுமதி உடனே கிடைத்தது, பேரணியில் பங்கேற்றவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் போலீஸ் குவிக்கப்பட்டது. செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம். பேரணி நடைபெற்ற சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் அரசு விழா திட்டமிடப்பட்டிருந்தது. காலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த விழா, அழகிரியின் பேரணிக்காக மாலை 3 மணிக்கு மாற்றப்பட்டது. அந்த அளவுக்கு முதல்வர் முதல் போலீஸ் வரை அ.தி.மு.க அரசு அழகிரிக்காக நெகிழ்ந்து கொடுத்தது.

கலைவாணர் அரங்கத்தின் பின்னால் உள்ள பழைய எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் அழகிரியின் ஆதரவாளர்கள் பலருக்கு அறைகள் பக்காவாக ஒதுக்கப்பட்டு இருந்தன. முதல்நாளே பேரணிக்குக் கிளம்பி வந்தவர்கள், அங்குதான் தங்கியிருந்தனர். திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன் வாசல், அழகிரியின் கட்சி அலுவலகத்தைப் போல் பரபரப்பாக இருந்தது. கடைசி நேரத்தில் போலீஸ் நிலையத்தின் வாசலில் வைத்துத்தான், மதுரையில் இருந்து வந்திருந்த சிலர் பேனர்களை ஒட்டித் தயார் செய்துகொண்டிருந்தனர்.

காலை 10.30 மணிக்குப் பேரணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதே கருணாநிதி, அழகிரி முகமூடிகள் அணிந்து அழகிரியின் ஆதரவாளர்கள் வலம்வந்தனர். மதுரை முன்னாள் மேயர் தேன்மொழி கோபிநாதன், முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முபாரக் மந்திரி, வேளச்சேரி ரவி, தென் சென்னை இளங்கோவன், சைதை மு.க.ரமேஷ், எழும்பூர் அண்ணாதுரை, மதுரை ஜெயவீரன் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளிலிருந்து ஆட்களை அள்ளிக் கொண்டு வந்தனர். பேரணியில் பங்கேற்றவர்களில் ஒரு தரப்பினர் கல்லூரி மாணவர்கள்; மற்றொரு தரப்பினர் முதியோர்கள். இவர்கள் அழைத்து வரப்பட்டவர்கள். மற்றவர்கள்தான் அழகிரியின் ஆதரவாளர்கள், தி.மு.க-வின் உள்கட்சி அதிருப்தியாளர்கள்.

நண்பகல் 12 மணிக்கு பேரணி தொடங்கியதால், பலர் சோர்ந்துவிட்டனர். வெயில் அதிகம் வாட்டியதால், பேரணி தொடங்கும் முன்பே பெரும்கூட்டம் ஒன்று மெரினாவுக்குப் போய் விட்டது. மதியம் 11.30-க்கு மேல்தான் அழகிரி வந்தார். மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி உடன் வந்தனர். பேரணியைத் தொடங்கி வைத்துச் சிறிது தூரம் நடந்துவந்த அழகிரி, பிறகு ‘முருகன் துணை’ என்று எழுதப்பட்ட வேனில் ஏறினார். கயல்விழியும் அந்த வேனில் ஏறிக்கொள்ள, துரை தயாநிதி மட்டும் நடந்துவந்தார்.

பேரணியில் வந்த யாரும் ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பவில்லை. ‘அழகிரியைக் கட்சியில் சேர்க்க வேண்டும்’ என்றும், ‘கழகத்தைக் காக்க வந்தவர்’ என்றுமே கோஷமிட்டனர். மெதுவாக நகர்ந்துவந்த பேரணி ஒரு மணி அளவில் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியை அடைந்தது. மதுரையில் இருந்து விமானத்தில் கொண்டுவரப்பட்ட மதுரை மல்லியால், கருணாநிதி சமாதி அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு அஞ்சலி செலுத்திய அழகிரி, “பேரணிக்கு வந்திருந்த ஒன்றரை லட்சம் பேருக்கும் நன்றி... என்னை வரவேற்றதற்கே கட்சியைவிட்டு நீக்கினார்கள். இப்போது இந்த ஒன்றரை லட்சம் பேரையும் நீக்குவார்களா?” என்று கேட்டுவிட்டுச் சென்றார். பேரணிக்கு வந்தவர்கள் எண்ணிக்கை என போலீஸ் தரப்பு சொன்னது 13 ஆயிரம் பேர்.

இந்தப் பேரணி அழகிரிக்குச் சொல்லும் பாடம், அழகிரியால் ஆட்களைத் திரட்ட முடியும்; ஆனால், அதற்கு ஒரு ‘விலை’ கொடுக்க வேண்டும் என்பதே!

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: சு.குமரேசன், வி.ஸ்ரீனிவாசுலு