இந்தியா முழுக்க அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்றால், கோவை நகரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டம் குறித்து யாரும் பேசக்கூடாது, எழுதக் கூடாது, விமர்சிக்கக் கூடாது என்று அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஏற்பாட்டில் தான் இந்தத் திட்டம் வந்திருக்கிறது.

இந்தச் சூழலில், கோவையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலரும் வழக்கறிஞருமான லோகநாதன், மிகவும் போராடி இந்தத் திட்டம் குறித்து தகவல்களைப் பெற்றுள்ளார். அவரை சந்தித்துப் பேசினோம். ‘‘கோவை மாநகராட்சியில் 31.01.2011 அன்று நிறைவேற்றப் பட்டத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது என்று ஆவணங்கள் சொல்கின்றன. ‘மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அதற்கு சிறுவாணி, பில்லூர் I, பில்லூர் II குடிநீர்த் திட்டங்களின்கீழ் புதிதாக நீர்த்தேக்கத்தொட்டிகள் கட்டுவதற்குத் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம் ரூ.595.24 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தந்துள்ளது. இதை அரசுக்கு அனுப்பி உரிய மானிய நிதி பெறவும், இப்பணியினை முழுமையாக மேற்கொள்ளவோ அல்லது பகுதி பகுதியாக மேற்கொள்ளவோ நடவடிக்கை மேற்கொள்ளலாம்’ என்கிறது அந்தத் தீர்மானம்.

அதில், ‘தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தலாம்’ என்ற வார்த்தைகள் இல்லை. 27.08.2015 அன்று இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையில்தான், ‘தனியார்’ (Public private partnership) என்பதைச் சேர்த்துள்ளார்கள். மாமன்ற தீர்மானத்தில் குறிப்பிடப்படாத ‘தனியார்’ என்ற வார்த்தையைச் சேர்த்து அரசாணை வெளியானது எப்படி? இதில்தான் இந்தத் திட்டத்தில் உள்ள மர்மம் ஒளிந்திருக்கிறது. இவர்கள் முறைப்படி மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறார்கள் என்றால், மீண்டும் மாநகராட்சியில் ஒரு தீர்மானம் கொண்டுவந்து ‘தனியார் மூலம் இந்தத் திட்டத்தை நிறைவேற்றப்போகிறோம்’ என மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்புதல் பெற்றுச் செயல்படுத்தியிருக்கலாம். ஏன் அதைச் செய்யவில்லை?

இந்தத் திட்டத்துக்கான டெண்டரை வெளியிட்டதிலும் பெரும் குளறுபடிகள் நடந்திருக்கின்றன. ஒரு டெண்டர் அறிவிப்பு எப்படி விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று 22.7.2011 அன்று நகராட்சி நிர்வாகங்கள் துறை ஒரு சர்க்குலர் வெளியிட்டிருக்கிறது. ரூ.50 கோடிக்கு மேலான மதிப்புடைய டெண்டர்களை இரண்டு ஆங்கில நாளிதழ்களில் (ஆல் இண்டியா எடிஷன்) வெளியிட வேண்டும், அவற்றில் ஒன்று பிசினஸ் நாளிதழாகவும் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது Indian Trade journal-லிலும் விளம்பரப்படுத்த வேண்டும். ஆனால், ரூ. 3,167 கோடிக்கு விடப்பட்ட இந்த டெண்டரை தென்னிந்திய அளவிலான ஓர் ஆங்கில நாளிதழிலும் இரண்டு தமிழ் நாளிதழ்களிலும் மட்டுமே விளம்பரப்படுத்தி யுள்ளார்கள். எனில், இவர்களின் நோக்கம் என்ன?

டெண்டர் குறித்து அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கழித்தே சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரூ.595.24 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட திட்டத்தை ரூ.3,167 கோடிக்குத் தூக்கிக்கொடுத்திருக்கிறார்கள். காலதாமதம் ஏன் என்பதையும், டெண்டரில் எந்ததெந்த நிறுவனங்கள் பங்கேற்றன என்பதையும் மாநகராட்சி வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

மாநகராட்சி தீர்மானத்தில், ‘கோவையின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம்’ என்று உள்ளது. ஆனால், சூயஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம், 60 வார்டுகளுக்கு மட்டுமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கானது. இது எவ்வளவு பெரிய அபத்தம். மீதம் உள்ள 40 வார்டுகளின் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கப் போகிறார்களா? தவிர, இவர்கள் சொன்னபடி ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் எப்படிக் குடிநீர் வழங்க முடியும்? அணைகளில் இருக்கும் நீரையே சூயஸ் நிறுவனம் நிர்வகிக்கப்போகிறது. மழை பொய்த்தாலோ, கோடைக் காலங்களில் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்தாலோ, இவர்கள் எங்கிருந்து 24 மணி நேரமும் தண்ணீர் கொடுப்பார்கள்? இருக்கும் தண்ணீரைத் தன் ஆளுகைக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு வழங்கிவிட்டு, மிஞ்சினால்தான் மற்ற 40 வார்டு களுக்குக் கொடுக்க அனுமதிப்பார்களா?

நாக்பூரில் இதேபோன்ற குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. 15 சதவிகித வீடுகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் 24 மணி நேரமும் வழங்கப்படவில்லை. ஆனால், ஆண்டுதோறும் குடிநீர்க் கட்டணத்தை மட்டும் உயர்த்திக்கொண்டு போகிறார்கள். நாக்பூர் மக்கள் குடிநீருக்காகப் படும் இன்னல்கள் தெரிந்தால், கோவை மக்களும் இன்றே கோவை மாநகராட்சியை முற்றுகை யிட்டுவிடுவார்கள். மிகப்பெரிய பிரச்னையைக் கோவை சந்திக்கப்போவது நிச்சயம்” என்கிறார் கொதிப்புடன்.

இதுதொடர்பாக விளக்கம்பெற கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனைத் தொடர்பு கொண்டோம். ‘‘இது தொடர்பாக நிறையத் தீர்மானங்கள் இருக்கின்றன. இந்தத் திட்டத்தில் எந்தத் தவறும் இல்லை. எல்லாம் சரியாக நடக்கிறது’’ என்றார் அவர்.

முழுக்க நனைந்தபின்பும், போட்ட முக்காட்டைத் துறக்க மறுக்கிறது கோவை மாநகராட்சி.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்