Published:Updated:

பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக உறுப்பினர்கள் முழக்கத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

பாகிஸ்தான் சிறையில்  கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் மரணம் அடைந்தார். இவரது மரணத்துக்கு பாகிஸ்தான் அரசே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள், பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமி்ட்டனர். இதனால் மக்களவை 11.30 மணி ஒத்திவைக்கப்பட்டது.

##~~##
இதேபோல், மாநிலங்களவையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு

இந்நிலையில் மக்களவை பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியபோதும் இதே நிலை காணப்பட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.