2011-ம் ஆண்டின் துவக்க மாதங்களில் தி.மு.க. ஆளும் கட்சியாகவும் அ.தி.மு.க. பிரதான எதிர்க் கட்சியாகவும் இருந்தன. மின்வெட்டு போன்ற பிரச்னைகள் மக்களை ஆட்டுவித்துக்கொண்டு இருந்த நேரம் அது. ஆனால், அ.தி.மு.க. அந்தப் பிரச்னை குறித்து கவனத்தில் கொள்ளவே இல்லை. கொடநாட்டிலும் ஹைதராபாத் தோட்டத்திலும் கட்சி உறங்கிக்கொண்டு இருந்தது. தேர்தல் நெருங்கும்போது விழித்துக்கொண்டு ஒரு சில போராட்டங்களை முன்னெடுத்தது. தேர்தலை மனதில்வைத்து தான் அவற்றையும் செய்தது. 'கருணாநிதி ஒரு தீயசக்தி’ என்கிற அளவிலேயே அவர் களது போராட்டம் நின்றுபோனது. மற்ற எதிர்க் கட்சிகள் போராடிய அளவுகூட பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க. அப்போது போராடவில்லை.

தேர்தல் முடிந்து மே மாதத்தில் அ.தி.மு.க. பதவி ஏற்றது. பிரதான எதிர்க் கட்சியாக தே.மு.தி.க. உருவானது. ஜெயலலிதா அரசில் விலைவாசி உயர்வு விண்ணைத் தொட்டுவிட்டது. பால் கட்டணம், பேருந்துக் கட்டணம் என்று எல்லாமே உயர்ந்துவிட்டன. ஆனால், தே.மு.தி.க. தொடர்ந்து மௌனம் சாதித்தது. சமச்சீர்க் கல்வியை நிறுத்திவைத்து மாணவர்களை ஏகத்துக்கும் அல்லாடவிட்டார் ஜெயலலிதா. மக்களை நேரடியாகப் பாதித்த, அரசின் மேல் அதிருப்தி கொள்ளவைத்த இந்தப் பிரச்னையிலும் தே.மு.தி.க. கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு விஜயகாந்த் வாய் திறந்து சமச்சீர்க் கல்வி குறித்துப் பேசியபோது அதற்கு மௌனமே தேவலாம் என்று தோன்றியது. இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் போராட்டத்தைப் பதிவுசெய்தன. கூட்டணியில் இருந்தாலும்கூடத் தயங்காமல் போராட்டங்களை முன்னெடுத்தன

இடதுசாரிக் கட்சிகள்.

ஆனால், அந்தப் போராட்டங்களிலும் முக்கியக் குறைபாட்டை சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்த ஆண்டு பெட்ரோல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என்று தொடர்ந்து மக்களுக்குச் சோதனை மேல் சோதனை! ஆனால், மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடும் எல்லா வகையான போராட்டங்களிலும், கட்சி ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர். பொதுமக்கள் பங்கேற்கவில்லை. எதிர்க் கட்சிகள், மக்களைப் போராடத் தூண்டியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்கள் மட்டும் பங்கேற்றால் போதும் என்று மெத்தனம் காட்டியது தவறு. எதிர்க் கட்சிகளுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு உயிரோட்டமானதாக இல்லை. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக மட்டுமே மக்கள் தன்னெழுச்சியாகப் போராடத் துணிந்தார்கள். மற்ற பிரச்னைகளில் அவ்வாறு நடக்கவில்லை. சமச்சீர்க் கல்வியிலும்கூடப் பொதுமக்களுக்கு சரியான விழிப்பு உணர்வை எதிர்க் கட்சிகள் ஊட்டவில்லை. அதோடு, போராட்டங்கள் எல்லாமே அடையாளப் போராட்டங்களாகத் தேங்கி நின்றுவிட்டன.

தமிழ்நாட்டின் முக்கியக் கட்சியான தி.மு.க-வோ தனது சொந்தப் பிரச்னைகளில் மூழ்கி மக்கள் பிரச்னைகளை மறந்தது. அண்ணா நூலக மாற்றம், விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்னைகளில்கூட பெரிய அளவில் போராட் டங்களை முன்னெடுக்காமல் விட்டு விட்டது. கல்வி சார்ந்த விஷயங்களில் எந்தக் கட்சியினருக்குமே போதுமான தெளிவு இல்லை. அதுபற்றி பல கட்சிகள் வாய் திறப்பதே இல்லை. எந்த எதிர்க் கட்சியுமே மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து செயல்படவில்லை என்பதுதான் உண்மை! தேர்தலை மையப்படுத்திச் செயல்படாமல், எதிர்க் கட்சிகள் மக்களை மையப்படுத்தி செயல்பட்டால் உண்மையிலேயே சாதகமான மாறுதல்கள் வர வாய்ப்பு உண்டு!''