Published:Updated:

சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு
சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு
சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க. உறுப்பினர் கலையரசு வெளிநடப்பு செய்தார்.

ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ காடுவெட்டி குரு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், பா.ம.க. உறுப்பினர் கலையரசு, சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டது குறித்து பேச அனுமதி கேட்டார்.

##~~##
இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனை கண்டித்து பா.ம.க. உறுப்பினர் கலையரசு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.