எங்கள் பகுதிக்குப் புதிய தொழிற்சாலைகள் வேண்டும் என்றுதான் இது வரை பொதுமக்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். 'ஒரு நிறுவனம் வேண்டாம்’ என்ற போராட்டம் தமிழகத்தின் கூடங்குளத்தில்தான் பெரிய அளவில் நடந்து உள்ளது. 'இது எங்கள் பகுதியை வளப்படுத்த வரவில்லை... அழிக்க வந்துள்ளது’ என்று அந்தப் பகுதி மக்கள் நினைப்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம்!

அணு உலைக்கு எதிராக மக்கள் எழுப்பும் நியாயமான அச்சங்கள், கேள்விகள் ஒன்றும் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. அவை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தியாவில் பல மக்கள்சார் விஞ்ஞானி களும் அணு உலை எதிர்ப்பாளர்களும் கேட்கும் கேள்விகளே. உலகம் முழுக்க இந்தக் கேள்வி கேட்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்களாக, தேசத் துரோகிகளாகச் சித்திரிப்பதுதான் வழக்கம். அணு உலை மிக நல்ல முறையில் விபத்து இல்லாமல் இயங்கினாலே அதில் இருந்து வெளியேறும் அனுமதிக்கப்பட்ட கதிர்வீச்சினால் ஏற்படும் புற்றுநோய், கருச்சிதைவு, சிதைந்து பிறக்கும் குழந்தை கள், தைராய்டு கோளாறுகள் ஆகியவைபற்றி ஏராளமான சர்வதேச மற்றும் இந்திய அளவிலான ஆய்வுகள் வந்துள்ளன. ஒவ்வொரு 1,000 மெகா வாட் அணு உலையில் இருந்தும் ஆண்டுக்கு 30 டன் அணுக் கழிவு வெளிப்படுகிறது. இந்தக் கழிவுகளைக் கையாள முடியாமல்தான், மேற்கத்திய நாடுகள் கழிவுகளை சோமாலிய நாட்டுக் கடலில் கொட்டியதும், அதனால் அங்குலட்சக்கணக்கானவர்கள் மர்மமான முறையில்இறந்துபோனதும் சமீபத்திய வரலாறு!

ஃபுகுஷிமாவைத் தொடர்ந்து உலக நாடுகள் எல்லாம் பெரும் எச்சரிக்கையுடன் தங்களின் திட்டங்களை மக்கள் நலன் கருதி மூடுவிழா நடத்தத் திட்டமிடும் வேளையில், இந்தியா மட்டும் ஏன் இத்தனை அணு உலை வளாகங்களை நிறுவத் துடிக்கிறது? ''நாம் வெளிநாட்டு நிறுவனங்களின் நலன் மீது அக்கறைகொள்ள வேண்டும். அதனால்தான் நாங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் தீவிரமான பேரத்தில் இடைத்தரகர்களாக இருந்து நம் மீதான தடைகளை நீக்கி, அவர்களிடம் பல அணு உலைகளை வாங்குவதற் காக ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு உள்ளோம். அவர்களின் வியாபார நலன்களுக்காகவே இந்த ஒப்பந்தங்களைச் செய்தோம்!'' - இவ்வாறு கூறுபவர் வேறு யாரும் இல்லை... முன்னாள் இந்திய அணு சக்தித் துறையின் தலைவர் அனில் கக்கோட்கர்தான்!

ஃபுகுஷிமாவில் இவர்கள் கூறும் ஐந்து அடுக்குப் பாதுகாப்பு இருந்ததா, இல்லையா? அணுக் கழிவுகளைக் கையாள முடியாமல் ஏன் உலக நாடுகள் திணறுகின்றன? சுனாமியை இந்திய அணு உலை களின் கட்டுமானங்கள் கணக்கில் எடுத்து உள்ளதா? இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சாரம் யூனிட் 3 ரூபாய்க்குக் கொடுக்கப் படுமாம். அது சரி... அதன் தயாரிப்புச் செலவு யூனிட்டுக்கு முப்பதா அல்லது முந்நூறா அல்லது மூவாயிரம் ரூபாயா? நாம் கேட்பது எல்லாம் கேள்விகளே!

ஏன் அரசுகள் தொடர்ந்து பொய்களையே பேசுகிறது என்று கோபம்கொள்ள சாமானியக் குடிமக்களுக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா?

1985-ல் அமெரிக்காவின் ஷோர்மேன் அணு உலையை எதிர்த்து ஆயிரக்கணக் கில் மக்கள் திரண்டபோது, அந்த உலை ஒரு நாள் ஓட்டத்துக்குப் பிறகு கைவிடப் பட்டது. அது பின்னர் அப்படியே இயற்கை எரிவாயுவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையமாக மாற்றப்பட்டது. இந்த அனுபவம் நிச்சயம் நமக்கு வழிகாட்டும்!''